கோவை: கோவையில் பழைய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகளை மாற்றி தரக் கோரிக்கை விடுத்திருந்த மூதாட்டிக்கு சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அவரது சொந்த நிதியிலிருந்து 15,000 ரூபாய் வழங்கி உதவி செய்துள்ளார்.
சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி (வயது 79) என்ற மூதாட்டி. இவரது மகன் லாரி ஓட்டுநராக இருந்தபோது சேமித்து வைத்து இருந்த ரூ.15,000 மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை, அவரது மரணத்திற்குப் பிறகு கண்டெடுத்துள்ளார்.
இந்த பணத்தை வங்கியில் மாற்ற முயன்ற அவர், பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் பயனின்றி திரும்பி உள்ளார்.
Advertisement

இதனிடையே நேற்று மீண்டும் ஆட்சியர் அலுவகம் வந்த அவர், கண்ணீர் மல்க தனது பிரச்சனையை கூறவே, அந்த பணத்தை மாற்றித்தர ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மூதாட்டிக்கு ரூ.3,000 கொடுத்து வழியனுப்பினர்.

ஊடகங்களில் பாட்டி குறித்த செய்தி வைரலான நிலையில், அதனைப் பார்த்த சிங்காநல்லூர் அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் ஜெயராம் இன்று மூதாட்டியின் இல்லத்திற்கு நேரில் சென்றார்.
மேலும், அவரது சொந்த நிதியில் இருந்து 15 ஆயிரம் ரூபாயை மூதாட்டிக்கு வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட மூதாட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
Advertisement
