திருப்புவனம் கொலை: கடமை தவறியவர்களுக்கு தண்டனை – முதலமைச்சர்

சென்னை: திருப்புவனம் அஜித்குமார் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில், கடமை தவறியவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞர் விசாரணை என்ற பெயரில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்த நிலையில், இளைஞரை போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோவும் வெளியாகி, போலீஸ் தாக்குதலை அம்பலப்படுத்தியது.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசையும், போலீசாரையும் கடுமையாக சாடியுள்ளது. இந்த வழக்கில் அதிகாரிகளை காப்பாற்ற முயன்றால் கடுமையான உத்தரவுகளை இட நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement
திருப்புவனம் அஜித்குமார் கொலை, போலீஸ் தாக்குதல் வீடியோ, சிவகங்கை இளைஞர் கொலை வழக்கு, திருப்புவனம் வழக்கு, Thiruppuvanam Ajithkumar murder, police attack video, Sivaganga youth murder case, Thiruppuvanam case,
உயிரிழந்த அஜித்குமார்

இதனிடையே உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வீடியோ காலில் பேசினர், அப்போது, “நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. நான் இருக்கிறேன். உடனே நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன். தைரியமாக இருங்கள்.” என்றார்.

மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது X வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு.

கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்.

Velapppa chettinadu mess Coimbatore

என்று குறிப்பிட்டுள்ளார்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

Comments are closed.

Recent News

உதயநிதியைக் கண்டித்து தவெக எம்எல்ஏ.,க்கள் ஆர்ப்பாட்டம்!

பெண்களை அவமதிக்கும் வகையில் பேச்சு இடம்பெற்றதாக குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை திரு.வி.க. நகரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.