கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு…

கோவை: கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சூழல் சுற்றுலா இன்று தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது.

Advertisement

கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் விளங்கி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர்

இந்நிலையில் ​கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

​இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (21/09/2026) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

Advertisement

​மழை தணிந்து, அருவியில் நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நிலைமை சீரானதும் சுற்றுலா மீண்டும் தொடங்கும் நாள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சுற்றுலாப் பயணிகள் இன்று கோவை குற்றாலத்திற்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நடுவானில் பலமுறை வட்டமடித்த இண்டிகோ விமானம்! கோவையில் மோசமான வானிலையால் பரபரப்பு

கோவையில் மோசமான வானிலை காரணமாக இண்டிகோ விமானம் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டு, பின்னர் கோவை வந்தடைந்தது.

Video

கோவையில் தனியார் பேருந்தால் ஏற்பட்ட விபத்து- பொதுமக்கள் வாக்குவாதம்…

கோவை: தனியார் பேருந்தால் வாகன ஓட்டி படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை திருச்சி சாலையில் அதிகவேகமாகச் சென்ற பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில், வாகன ஓட்டி...