போதை இல்லாத சமூகத்தை உருவாக்குவோம்! உக்கடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை: உக்கடம் வின்சென்ட் குடியிருப்பு பகுதியில் “Choose Life, Not Drugs” என்ற கருப்பொருளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

Advertisement

கோவையில் HDFC Parivartan on Wheels – Ramky Foundation சார்பில், “Choose Life, Not Drugs” என்ற கருப்பொருளில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி உக்கடம் வின்சென்ட் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை உக்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதுசூதனன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் ஹஸ்கர் அலி தலைமை தாங்கினார்.

இதில் மருத்துவ அலுவலர் அருண்ராஜ், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், உளவியல் மற்றும் உளசமூக பாதிப்புகள், சட்டரீதியான விளைவுகள் குறித்து விளக்கினார். மேலும், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்வு செய்வது மற்றும் போதைப்பொருள் தடுப்பில் சமூகத்தின் பொறுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக “Choose Life, Not Drugs” என்ற கருத்தை மையமாகக் கொண்ட சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கிரிஸ்டினா, சையத் இப்ராஹிம், சிவிமோல் மற்றும் அனீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பங்களித்தனர்.

Advertisement

போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம் என்பதை வலியுறுத்தி நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...