தமிழக அரசு பட்ஜெட் ஏமாற்றம்- டேக்ட் ஜேம்ஸ் தெரிவிப்பு…

கோவை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க தலைவர் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் “மூலப்பொருள் வங்கி மற்றும்
நிலை கட்டண சலுகை முதல்
தொழிற்பூங்கா வரை”
குறுந்தொழில் வளர்ச்சிக்கு எதிர் பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க தலைவர் (டேக்ட்) ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) அமைப்பின் தலைவரும் கோவை தொழில் துறையினர் கூட்டமைப்பு (போசியா) ஒருங்கிணைப்பாளருமான ஜேம்ஸ் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது

தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சியமைத்துள்ள தமிழக வெற்றி கழகம் தங்களது முதல் பட்ஜெட்டை இன்று சமர்ப்பித்துள்ளது. அந்த பட்ஜெட்டில்
குறிப்பாக மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் வந்துள்ளதாகவும்
அதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கோவையிலிருந்து அரியலூர் வரையிலும், புதிய மின் பாதை அமைப்பதற்கான திட்டமிடலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு டிரான்ஸ்பார்மர்களின் மின்மாற்றி அமைப்பதற்கான திட்டமிடலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

40,000 மின்மாற்றிகள் மாற்றுவதற்கான அறிக்கையும், அதற்கான நிதி ஒதுக்கீடும் இந்த பட்ஜெட்டில் தவெக அரசு வழங்கியுள்ளது. அதேபோல சென்னையில் அனைத்து பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர் மாற்றுவதற்கான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது,

தமிழகம் முழுவதும் சுமார் 55 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் மாற்றுவதற்கான திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் எம்.எஸ்.எம்.இ துறைக்கு 2000 கோடி கொடி ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், தற்போதய தவெக அரசு 2145 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை எல்லாம் தொழில்துறையினர் சார்பாக வரவேற்பு தெரிவிப்பதாகவும், இன்னும் பல்வேறு திட்டங்களை மக்களுக்கான திட்டங்களாக கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

குறிப்பாக தற்போதைய பட்ஜெட்டில் தொழில்துறையினருக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்த நிலை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொழில்துறையினர் தொடர்ந்து அரசுக்கு தொழில் துறையினர் முன் வைத்திருந்த நிலையில் அந்த கோரிக்கை சம்பந்தமாக இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படாதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிய சிப்காட்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ள தவெக அரசு, நாங்கள் எதிர்பார்த்த குறுந்தொழில் பேட்டைக்காண ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் இல்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கின்றது என்றார்.

இன்றைய பட்ஜெட்டில், தமிழகத்தில் புதிய தொழில் கொள்கைகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் அதை எந்த வடிவத்தில் உருவாக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. எதற்கு முக்கியத்துவம் அளிக்கப் போகிறார்கள் என்றும் புரியவில்லை. என தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் நாங்கள் நீண்ட நெடிய நாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்ற, குறுந்தொழில் பேட்டை மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையில், அது குறித்து அறிவிப்பு வராதது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று தெரிவித்தார்.

மின்சாரத் துறையில் சந்தித்து வருகின்ற நிலை கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

நாளுக்கு நாள் சிறு குறு தொழில் துறையினர், தினம் தினம் சந்திக்கும் உதிரி பாகங்கள் விலை உயர்வு, நாளுக்கு நாள் ஏறும் தங்கத்தின் விலைக்கு ஈடாக சென்று கொண்டிருப்பதாகவும் இவற்றை நீக்க, கோவை மாநகரில் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்று பல்வேறு கட்ட கோரிக்கை களையும் தொழில் துறையினர், முன் வைத்திருந்தோம் அந்த கோரிக்கைகள் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வராதது வேதனை அளிக்கிறது என்றார்.

கடந்த கடந்த எட்டு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் மூலப்பொருள் வங்கி என்று ஒரு வங்கி, இருந்ததாகவும் அந்த வங்கியின் மூலமாக தொழில்துறையினருக்கு தேவையான அனைத்து மூலதன உதிரிபாகங்களும் தொழில் துறையினர் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக இருந்தது, தற்பொழுது வெளி மார்க்கெட்டில் இது இருப்பு, உள்ளிட்ட மூலப்பொருட்களை பெறப்படுவதால் ஆயிரம் முதல் லட்சங்கள் வரையிலான தொகையை கூடுதலாக வழங்கி மூலப்பொருள்கள் பெற வேண்டிய நிலை உள்ளது.

இதனால் தொழில் துறையினர் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர் எனவே இங்கு தொழிற் பூங்கா அமைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளிவராதது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...