அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்- மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…

கோவை: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisement

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு 60 வயதை எட்டிய பின் மாதந்தோறும் ரூ.3000/உறுதியான ஓய்வூதியம் வழங்கும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சேர்ந்து பயனடையலாம்.

Pradhan Mantri Shram Yogi Maandhan Scheme என்ற திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகள் மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை முறையாக செலுத்தி வந்தால்இந்திய அரசும் அதே அளவு இணைபங்களிப்பை வழங்கும்இதன் மூலம் 60 வயதை அடைந்த பின்னர் மாதம்தோறும் ரூ.3000/-உறுதியான ஓய்வூதியம் பெறும் வசதி வழங்கப்படுகிறது.

Advertisement

சுற்றுலா வழிகாட்டிகள் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குதல் விடுதி மற்றும் விருந்தோம்பல் துறை பணியாளர்கள். துப்புரவு தொழில் பணியாளர்கள். கைவினை கலைஞர்கள், தெருவோர வியாபாரிகள், உணவகம் மற்றும் உணவு சேவை வழங்குநர்கள் மற்றும் சுற்றுலாத் தொடர்புடைய பிற சேவை வழங்குநர்கள் திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

தகுதியுடைய அனைத்துத் தொழிலாளர்களும் தங்களது ஆதார் அட்டை வங்கி கணக்கு புத்தகம் மற்றும் கைபேசி எண்ணுடன் அருகில் உள்ள பொதுசேவை மையத்தை அணுகி இத்திட்டத்தில் https://maandhan.in/maandhan/login என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சங்கங்கள். விடுதி உரிமையாளர்கள், பயண முகவர்கள். சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தகுதி உடைய தொழிலாளர்கள் பதிவு செய்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் ஜெகதீஸ்வரி 8939896380 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...