கோவை: சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா என விஜய் அஜித் போஸ்டர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது
லண்டன் சென்றிருந்த தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய், நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தய மைதானத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்பொழுது இருவரும் ஆரத்தழுவி பேசியது இருவரது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பலரும் மகிழ்ச்சி ஆன கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட அஜித் தலைமை செயலகம் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கோவை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. “சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ் டா” என்ற வசனங்களுடன் இருவரது புகைப்படங்களை குறிப்பிட்டு அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர் உள்ளிட்ட பல்வேறு மாநகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.




