9ம் தேதி கோவையில் போக்குவரத்து மாற்றம்- பொதுமக்கள் கடைபிடிக்க அறிவுறுத்தல்…

கோவை: 9ம் தேதி கோவை அவிநாசி சாலை புதிய மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

வருகின்ற 9ம் தேதி கோவை அவிநாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வை முன்னிட்டு கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில்,

நீலாம்பூர் விமான நிலையம் வழியாக சேலம் ஈரோடு திருப்பூர் மற்றும் ஆம்னி பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து நகருக்குள் வருவதற்கு தடை செய்யப்படுகிறது என்றும் அதற்கு மாற்றாக நீலாம்பூர் எல்என்டி பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர் ஒண்டிப்புதூர் சிங்காநல்லூர் ராமநாதபுரம் சுங்கம் வந்தடைந்து கே ஆர் ரோடு அவிநாசி சாலை அண்ணா சிலை வழியாக காந்திபுரம் வந்தடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலகு ரக வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவில் வலது புறம் திரும்பி காளப்பட்டி நால்ரோடு, விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நகருக்குள் இருந்து கோவை விமான நிலையம் வழியாக அவிநாசி சாலை செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அவிநாசி சாலை, விமான நிலையம், வழியாக நகரின் வெளியே செல்லும் வாகனங்கள் லட்சுமி மில்லில் இருந்து புளியகுளம் ராமநாதபுரம் சிங்காநல்லூர் எல்என்டி பைபாஸ் வழியாக வெளியே செல்லலாம் என்றும் அதேபோன்று காந்திபுரத்திலிருந்து சக்தி சாலை வழியாக கணபதி விளாங்குறிச்சி காளப்பட்டி நால்ரோடு வழியாக எல்என்டி பைபாஸ் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இலகு ரக வாகனங்கள் தண்ணீர் பந்தலில் இருந்து கொடிசியா வழியாக காந்திமாநகர், பயணியர் மில், வழியே சென்று அவிநாசி சாலையை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் குறிச்சி பிரிவில் இருந்து போத்தனூர் கடைவீதி, ரயில் கல்யாண மண்டபம், செட்டிபாளையம் ரோடு வழியாக ஈச்சனாரி அடைந்து சர்விஸ் சாலை வழியாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பொள்ளாச்சி சாலை வழியாக நகருக்குள் வரும் பேருந்துகள் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் கற்பகம் கல்லூரி சந்திப்பில் இருந்து மேம்பாலத்தின் மேல் வராமல் சர்வீஸ் சாலையில் வந்து ஈச்சனாரி விநாயகர் கோவில் முன்புறம் இருந்து செட்டிபாளையம் ரோடு, போத்தனூர், நஞ்சுண்டாபுரம் சாலை, ராமநாதபுரம் வழியாக நகருக்குள் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மதுக்கரை மார்க்கெட்டில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் பிள்ளையார்புரம் செக்போஸ்ட் சுகுணாபுரம் வழியாக கோவைப்புதூர் பிரிவு குனியமுத்தூர் புட்டுவிக்கி வழியாக நகருக்குள் வரலாம் என்றும் மதுக்கரை மார்க்கெட்டில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் மாச்சம்பாளையம் பிரிவிலிருந்து இடது புறம் திரும்பி பாலக்காடு சாலை வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுக- வார்டு மக்களுடன் கோவை கவுன்சிலர் தர்ணா…

கோவை: தன்னை சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று வார்டு மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி... தன்னை களங்கப்படுத்தியதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.