இருளில் மூழ்கும் கோவை மாநகரம் – பல இடங்களில் எரியாத தெருவிளக்குகளால் மக்கள் அச்சம்

கோவை : கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் இருப்பதால், இரவு நேரங்களில் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்கள் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், குற்றச்செயல்களை கண்காணிப்பதிலும் போலீசாருக்கு சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

Advertisement

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய நகரங்களில் ஒன்றாக கோவை உள்ளது. மக்கள் தொகை மற்றும் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், மாநகரில் குற்றச்செயல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனை கண்காணிக்க காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குற்றச்சம்பவங்கள் தொடர்பான விசாரணையின்போது, சிசிடிவி கேமரா பதிவுகள் போலீசாருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளன. ஆனால், தெருவிளக்குகள் எரியாத பகுதிகளில் பதிவாகும் காட்சிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால், குற்றவாளிகளின் முகம் மற்றும் அடையாளங்களை தெளிவாக கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.

கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், சில இடங்களில் மாதக்கணக்கில் விளக்குகள் எரியாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தனியாக நடந்து செல்ல அச்சப்படும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

தெருவிளக்குகள் பழுது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து எழுந்து வருகிறது.

இந்நிலையில், கோவை மாநகரில் தெருவிளக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், அவற்றின் பராமரிப்பையும் மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா கூறியதாவது:

கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளிலும் தற்போது சுமார் 1 லட்சத்து 5 ஆயிரம் தெருவிளக்குகள் உள்ளன. இவற்றை பராமரிக்கும் ஒப்பந்ததாரர்கள் முறையாக பணிகளை மேற்கொள்வதில்லை என பல்வேறு புகார்கள் வருகின்றன.

இதனை சரிசெய்யும் வகையில், தெருவிளக்கு பராமரிப்பு பணிக்கு மற்றொரு நிறுவனத்தை ஈடுபடுத்த புதிய டெண்டர் கோர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தெருவிளக்குகள் பழுது தொடர்பாக மாநகராட்சிக்கு அளிக்கப்படும் புகார்களில், பழுது சரிசெய்யப்படாமலேயே புகார் முடித்து வைக்கப்பட்டதாகவும் சில புகார்கள் வருகின்றன.

தெருவிளக்கை பழுது பார்க்க வேண்டிய இடங்களில் முறையாக பழுது நீக்கம் செய்யப்பட்ட பின்னரும், புதிய விளக்கு தேவைப்படும் இடங்களில் புதிய தெருவிளக்கு பொருத்தப்பட்ட பின்னருமே சம்பந்தப்பட்ட புகார் முடித்து வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் குற்றச்செயல்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளின் விவரங்களை காவல்துறையிடம் இருந்து பெற்றுள்ளோம். அந்த பகுதிகளை அடையாளம் கண்டு, அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், கோவை மாநகராட்சி பகுதிகளில் புதிதாக 5,700 எல்இடி தெருவிளக்குகளை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கமிஷனர் கட்டா ரவி தேஜா தெரிவித்தார்.

Coimbatore street light problem and 5700 new LED lights plan

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அதிமுகவை நிர்வகிப்பது இவர் தான்- ஆதவ் அர்ஜுனா குறிபிட்ட நபர்…

கோவை: அதிமுகவை நிர்வகிப்பது எடப்பாடி பழனிச்சாமியின் மகன் தான் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளுக்காக வருகை புரிந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...