சந்தோஷ் டிராபி தொடரில் தமிழ்நாட்டுக்கு விளையாடிய வீரருக்கு கோவையில் நேர்ந்த சோகம்…

கோவை: சந்தோஷ் டிராபி தொடரில் தமிழ்நாட்டிற்காக விளையடிய கால்பந்து வீரர் கோவையில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

Advertisement

சந்தோஷ் டிராபி தொடரில் 2013ம் ஆண்டு தமிழ்நாட்டுக்காக விளையாடிய கால்பந்து வீரர் அசீம்கொரளையாடன் (40) கோவையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கேரளா மாநிலம் மலப்புறம் அரிக்கோடு புத்தலம் பகுதியை சேர்ந்தவர் அசீம் கொரளையாடன்(40). கோவை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இன்று காலை சித்ரா பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து போக்குவரத்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து பீளமேடு காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறை அவரது உடலை மீட்டு ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisement

இவர் அவரது இளம் வயதில் பல்வேறு கால்பந்து விளையாட்டு போட்டிகளில் விளையாடி உள்ளார் சந்தோஷ் டிராபி தொடரில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அணிக்கும் விளையாடி உள்ளார். இவரது இழப்பு விளையாட்டு ரசிகர்கள் மத்தியிலும் அவரது உறவினர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தனுஷ் கட்சி துவக்கம்?- அமைச்சர் சம்பத்குமார் கூறிய பதில்…

கோவை: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என நடிகர் தனுஷ் குறித்த கேள்விக்கு அமைச்சர் சம்பத்குமார் பதில் அளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சம்பத்குமார், கோவைக்கு ஆன்மிகம்,...

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...