கோவை: கோவை மாநகர காவல்துறையினருக்கு அன்பான அணுகுமுறை சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தலைமையில் காவல்துறையினர் பொதுமக்களிடம் அன்பாகவும்நட்புறவாகவும் மற்றும் மனிதநேயமிக்க அணுகுமுறையுடன் செயல்படுவதை மேம்படுத்தும் வகையில் அன்பான அணுகுமுறை Anbana Anugumurai) என்ற சிறப்பு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டிடத்தின் 4-வது மாடியில் அமைந்துள்ள அரங்கில் நடைபெறுகிறது. பயிற்சி காலை 9.00 மணி முதல் மதியம் 13.00 மணி வரையிலும், பிற்பகல் 14.00 மணி முதல் மாலை 17.30 மணி வரையிலும் நடைபெறுகிறது.
இப்பயிற்சியின் மூலம் பொதுமக்களிடம் காவல்துறையினர் கனிவுடனும் மரியாதையுடனும், பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்வதுசிறந்த தகவல் தொடர்பு திறனை வளர்த்துக் கொள்வது மற்றும் மக்கள் சார்ந்த காவல் பணியை மேலும் மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோவை மாநகர காவல்துறையின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு கட்டம்கட்டமாக பயிற்சி அளிக்கப்படும்தினமும் மொத்தம் 50 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்கின்றனர்.
பொதுமக்களுடனான காவல்துறையினரின் தொடர்பை, மேலும் சிறப்பாகவும், மனிதநேயத்துடனும் அமைத்து மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதே இச்சிறப்பு பயிற்சியின் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





