TNAU மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங்கில் பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங்கில் தொழில்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மூன்றாம் ஆண்டு பி.டெக். ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பயிலும் 10 மாணவர்களுக்கு, கோவையில் உள்ள அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் 10 நாட்கள் தொழில்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement

கல்லூரி முதன்மையர் முனைவர் ராஜ்குமார் முன்னெடுப்பிலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் துறைப் பேராசிரியர் முனைவர் மகேந்திரன் வழிகாட்டுதலிலும், நிறுவனத்தின் இரண்டாவது உற்பத்தி அலகில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.

பயிற்சி நிறைவு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவில், நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு மூத்த மேலாளரும் பயிற்சி ஒருங்கிணைப்பாளருமான சுரேஷ்குமார், இந்தியச் சந்தைக்கான டெக்ஸ்மோ (Texmo), அக்வாடெக்ஸ் (Aquatex) மற்றும் சர்வதேசச் சந்தைக்கான atx ஆகிய பிராண்டுகளின் உற்பத்தி முறைகள் குறித்து விளக்கினார்.

Advertisement

நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு பொது மேலாளர் டி. திருமேனி மற்றும் உதவி மேலாளர் செந்தில் பாரதி ஆகியோர், தொழிற்சாலைகளில் ஆற்றல் நுகர்வு, நிலைத்தன்மை அளவீடுகள் மற்றும் தொழில்துறை ஆற்றல் தணிக்கை நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.

இதன் மூலம் பம்ப் மற்றும் மோட்டார் தயாரிப்பு முறைகள், அசெம்ப்ளி லைன் செயல்பாடுகள், கார்பன் தடயத்தைக் குறைக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை மாணவர்கள் நேரடியாகக் கற்றுக்கொண்டனர்.

Advertisement

கல்வியில் கற்ற தொழில்நுட்பங்களை நடைமுறையில் பயன்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் நிலையான ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைகளில் பணியாற்றுவதற்கும் இந்தப் பயிற்சி உதவியாக அமைந்துள்ளது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சமூக வலைதளங்களில் இந்து மதம் குறித்து அவதூறு பரப்பியதாகப் புகார்!

கோவையில் சமூக வலைதளங்களில் இந்து மதம் குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் 26 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...