NDA கூட்டணிக்கு விஜய் வந்தால் துணை முதல்வராக வாய்ப்பு?மோகன்.ஜி போட்ட உப்புமா கணக்கு!

கொள்கையை விட்டுவிட்டு NDA கூட்டணியில் தவெக சேர வேண்டும் என பிரபல இயக்குநர் ஓபனாகவே விஜய்யை அழைத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், 2026 தேர்தலை மையமாக வைத்து தேர்தல் பணியாற்றி வருகிறார்.

ஆட்சி , அதிகாரத்தில் பங்கு என அறிவித்த விஜய்யின் கட்சிக்கு இதுவரை எந்த கட்சியும் கூட்டணி போட வரவில்லை. இதனால் தனித்து போட்டியிட விஜய் முடிவு செய்துள்ளார்.

இதனிடையே பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைய தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் திமுக, பாஜகவை தனது கொள்கை, அரசியல் எதிரி என பேசிய விஜய், எப்படி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போகலாம் என தவெக நிர்வாகிகளே புலம்பும் நிலை உருவாகியுள்ளது.

ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாத தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நேற்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி என்டிஏ கூட்டணிக்கு போகலாமா? வேண்டாமா? என ஆதரவை கேட்டுள்ளார்.

132 மாவட்ட செயலாளர்களில் 120 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்று, 90க்கு மேற்பட்டவர்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் தவெக, என்டிஏ பக்கம் போக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Bussy Anand

ஆனால் மறுபக்கம், தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், மக்கள் பிரச்சனைகளிலிருந்து, அனைவரின் கவனத்தையும் திசை திருப்பும் நோக்கத்தில், வழக்கம் போலவே தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை தொடர்புப் படுத்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக யூகங்களின் அடிப்படையில் தினசரி பல்வேறு செய்திகள் பரப்பப்படுகிறது.

கழக நிகழ்ச்சிகள் உள்ளிட்ட, கழகத்தின் சார்பாக வரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை மட்டுமே கழகத் தோழர்கள் பின்பற்றவும் என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வேண்டுகோளும் வைத்துள்ளார்.

இதனால் தவெக – பாஜக இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளதா? இல்லையா? என்ற குழப்பத்தில் தவெகவினர் செயலாற்றி வரும் நிலையில், திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி, ஓபனாகவே என்டிஏ கூட்டணிக்கு வாங்க என விஜயை அழைத்துள்ளார்.

Vijay should join the NDA alliance Mohan G Request

அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொள்கை கூட்டணி என பார்க்காமல் தேர்தல் கூட்டணி என பார்க்க வேண்டும்.. வெற்றி ஒன்றே இலக்காக தெரிய வேண்டும்.. இருக்கும 10 ஓட்டில் இட்லிக்கு 3 ஓட்டும், தோசைக்கு 3 ஓட்டும், உப்புமாவுக்கு மீதம் 4 ஒட்டு விழுந்தால் காலம் முழுக்க நமக்கு உப்புமாதான்.

இதை கருத்தில் கொண்டு துணை முதல்வராகவே அல்லது எதிர்கட்சி தலைவராகவே முதல் தேர்தலிலேயே நல்ல வாய்ப்பு அமைகிறது. NDA வுடன் இணைந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் தவெக கட்சியினர்.. இல்லனா ஓட்டு வரும் ஆனா சீட்டு வராது என ஓபனாகவே அழைத்துள்ளார்.

விஜய் போடும் கணக்கு தான் என்ன? இல்லை மோகன் ஜி சொல்வது போல உப்புமா கணக்கு ஆகிவிடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

உங்க சிரிப்புக்கு நான் அடிமை.. நடிகையிடம் மேடையில் வழிந்த தனுஷ்!

வளர்ந்து வரும் நடிகையின் சிரிப்பை பாராட்டி தனுஷ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Video

கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம், மற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள்...