இனி பேய் படங்களை எடுப்போம்- கோவையில் இயக்குனர் ராம் கொடுத்த அப்டேட்!

கோவை: கோவையில் இயக்குனர் ராம் மற்றும் பிறந்த போ திரைப்பட குழுவினர் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினர்.

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் வெளியாகியுள்ள பறந்து போ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் படக்குழுவினர் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினர்.

தொடர்ந்து பறந்து போ திரைப்படத்தின் இயக்குனர் ராம் மற்றும் நடிகர் சிவா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது
இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டது. கோவையில் தான் எனவும், முதல் நாள் சூட்டிங் கோவையில் தான் இருந்தது ,
கோவை சுற்று வட்டார பகுதியில் இந்த படம் எடுக்கப்பட்டு தற்போது வெற்றியாக உருவெடுத்து இருக்கிறது என தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் இந்த படம் வெற்றி அடைந்து இருக்கிறது எனவும், இந்த படத்தை வெற்றிப்படமாக கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும்,
புதிய முயற்சிகளை ஆதரித்துக் கொண்டு இருக்கும் மக்களுக்கு நன்றி எனவும் ராம் தெரிவித்தார்.

Advertisement

எப்பொழுதும் சீரியஸாக இருக்கும் ராம் எப்படி ? இது போன்ற கலகலப்பான படத்தை எப்படி எடுக்க முடிந்தது? என்ற கேள்விக்கு,

கோவையால் தான் கலகலப்பான படத்தை தன்னால் கொடுக்க முடிந்தது, எனவும் இங்கு இருக்கும் மக்களால் தான் என இயக்குனர் ராம் பதில் அளித்தார்.எந்த ? நடிகர் வந்தாலும் அவருடைய பலம் கதையில் வர வேண்டும் என தெரிவித்த அவர், சிவாவை இதில் பயன்படுத்தி இருக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

நான்கு படம் தான் எடுத்து இருக்கிறன், ஐந்தாவது படமாக பறந்து போ படத்தை எடுத்து இருக்கிறோம், பேய் படம் எல்லாம் இனி எடுப்போம் எனவும் இயக்குனர் ராம் தெரிவித்தார்.

இந்த முறை படம் பெரிய வெற்றி அடைந்து இருப்பதால் , வருங்காலத்தில் படம் எடுக்கும் இடைவெளி கண்டிப்பாக இனி கண்டிப்பாக குறைந்து போகும் என இயக்ககுனர் ராம் தெரிவித்தார்.

நடிகர் சிவாவும் இதே கோரிக்கையை இயக்குனர் ராமிடம் முன் வைத்தார். அப்போது அதிகப்படியான படங்களை இயக்க வேண்டும் எனவும் நடிகர் சிவா , இயக்குனர் ராமிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு பதில் அளித்த இயக்குனர் ராம் “பறந்து போ” நிறைய படங்கள் செய்ய வேண்டும் என்பதை தொடங்கி வைத்து இருக்கிறது, வணிக ரீதியான பெரிய வெற்றி அந்த கதவுகளை திறந்து வைத்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

உண்மையில் குழந்தைகள் பெற்றொர்கள் சேர்த்து பார்க்கும் படம் எனவும்,
வாழ்க்கையை கொண்டாட, சொல்கின்றது பறந்து போ திரைப்படம் எனவும் இயக்குனர் ராம் தெரிவித்தார்.

இயக்குனர் ராம் மற்றும் நடிகர் சிவா செய்தியாளர் சந்திப்பு வீடியோ

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமுதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.