கோவை: 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில் புரட்சிகர இளைஞர் முன்னணி மாநகர ஒருங்கிணைப்பாளர் மலரவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தவெக வேட்பாளர்கள்- விஜயை விமர்சித்த எஸ்.பி.வேலுமணி
சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவை தோற்கடிக்க வேண்டும். திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும். பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்கும் கட்சிகளை புறக்கணித்துவிட்டு தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவதற்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்
பாஜக அரசு மதம் மற்றும் சாதி ரீதியான பாகுபாட்டை வளர்க்கும் விதமாக பல்வேறு சட்ட திட்டங்களை அமலாக்கி நாட்டை பதற்றமான சூழ்நிலைக்கு உள்ளாக்கி இருப்பதாக குறிப்பிட்டார்.
இருக்கும் போது அக்கா.. வெளியே வந்ததும் அநாகரிகமா? விஜய் மீது நடிகை புகார்!
தமிழகத்தில் அனைத்து மக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர் இது போன்ற தமிழகத்திலும் கோவில் பிரச்சனைகளை திட்டமிட்டு பாஜகவினர் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதை பட்டியலிட்டார்.
தமிழகத்தில் மாணவர்களின் கல்விக்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்துள்ளதாகவும் ஆனால் பாஜக அரசு மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கின்ற வகையில் நீட் தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகளை தான் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

