கோவையில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பணி…

கோவை: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்திற்கு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

இந்தப் பணியிடம் பட்டியல் இனத்தவருக்கு (Scheduled Castes) ஒதுக்கப்பட்டுள்ளது. முழுமையான பார்வைத்திறன் குறைபாடு கொண்டவர்கள், அதாவது 100 சதவீத பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 40 வயதுக்கு உட்பட்டவராகவும், நாற்காலி பின்னல் தொழிலில் ஓராண்டு அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். இப்பணிக்கான ஊதிய விகிதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை, நிலை 2 அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால், பதிவு அட்டை, பட்டியல் இனத்தவர் என்பதற்கான சாதிச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (UDID), ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் இரண்டு மார்பளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்பமுள்ள தகுதியுடையவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 21.10.2026 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் கனமழை; வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி! – VIDEO

கோவையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகளும் தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கின்றனர்.

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...