இறந்தும் 4 பேருக்கு வாழ்வு கொடுத்தான் 5 வயது தங்கமகன்!

கோவை: கோவையில் 5 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் உறுப்புதானம் செய்ததன் மூலம் 4 பேருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளது.

Advertisement

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் விக்னேஷ் . இவரது மகன் சிவாதித்யா. இவர் அண்மையில் தனது தாத்தாவுடன் சென்றபோது சாலை விபத்தில் சிக்கினார்.

தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக நீலாம்பூர் அருகே உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைக்கு பலனின்றி, சிறுவன் கடந்த 12ம் தேதி மூளைச்சாவு அடைந்தான்.

Advertisement

இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் தங்களது மகனின் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) வழிகாட்டுதலின்படி, பல்துறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு சிறுவனின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள் மற்றும் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை பாதுகாப்பாக அகற்றினர்.

இதில் ஒரு சிறுநீரகம் அதே மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டது. அந்த சிறுநீரகம் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Advertisement

மற்றொரு சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதயம் ஆகிய உறுப்புகள் சேலம் மற்றும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வைக்கப்பட்டன.

5 வயது சிறுவனின் உறுப்புதானம் மூலம் 4 பேருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளது.

Amazon Link 3
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...