கோவையில் மீண்டும் மழை தொடங்கப்போகுது… இந்த வார வானிலை!

கோவை: கோவையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதனை இந்த தொகுப்பில் காணலாம்.

Advertisement

கோவையில் கடந்த சில வாரங்களாக மழை ஓய்ந்துள்ளது. நேற்று கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெயத நிலையில், பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனிடையே இந்த வாரம் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்:-

சனி – நவம்பர் 15: கோவையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை: 30°C / 22°C என்ற அளவில் பதிவாக வாய்ப்புள்ளது.

Advertisement

ஞாயிறு – நவம்பர் 16: நாளை கோவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை: அதிகபட்சம் 31°C, குறைந்தபட்சம் 22°C என்ற அளவில் பதிவாகும்.

திங்கள் – நவம்பர் 17: கோவை மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை: 30°C / 21°C

Advertisement

செவ்வாய் – நவம்பர் 18: கோவையில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
வெப்பநிலை: 30°C / 21°C பதிவாகும்

புதன் – நவம்பர் 19: மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.மேகமூட்டம் நீடிக்கும். வெப்பநிலை: 31°C / 22°C என்றளவில் பதிவாகும்.

வியாழன் – நவம்பர் 20: லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேகமூட்டம் நிலவும்; வெப்பநிலை: 30°C / 21°C

வெள்ளி – நவம்பர் 21: மேகமூட்டத்துடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை: 30°C / 21°C என்ற அளவில் பதிவாகலாம்.

வாசகர்கள் இந்த வானிலை முன்னறிவிப்பிற்கு ஏற்ப தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம். வானிலை மையத்தின் கணிப்புகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. அப்படி புதிய அப்டேட்டுகள் வருகையில் நமது தளத்தில் பதிவிடுகிறோம். இணைந்திருங்கள்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...