கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு- நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியானது…

கோவை: கோவை மாவட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடப்பட்டதில் 6.5 லட்சம் பேர் நீக்கம் செய்யபட்டுள்ளனர்.

Advertisement

கோவை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்பு கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகரியுமான பவன்குமார் இன்று வெளியிட்டார்.

அதில் எஸ்ஐஆர் (SIR) பணிகளுக்கு முன்பு, கடந்த 27-10-2025 நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள் பதிவாகியிருந்தனர்.

எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து,6,50,590 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இதனால், தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 25,74,608 ஆக உள்ளது.

Advertisement

நீக்கப்பட்ட வாக்காளர்களின் காரணம்,இறந்தவர்கள்– 1,19,489 பேர்,முகவரியில் இல்லாதவர்கள் 1,08,360 பேர்,நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் 3,99,159 பேர்,இரட்டை பதிவுகள் 23,202 பேர்,இதர காரணங்கள் 380 பேர்,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை பொதுமக்கள் சரிபார்த்து, பெயர் சேர்த்தல், நீக்கம் அல்லது திருத்தம் தொடர்பான மனுக்களை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பவன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

http://voters.eci.gov.in என்ற இணைய தளத்தில் வாக்காளர்கள் அவர்களது பெயர் உள்ளதா என தெரிந்து கொள்ளலாம்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி தேதி அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...