ஸ்பெயினில் பல்டி அடித்த அஜித் கார்… Ajithkumar car accident

ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்ட நடிகர் அஜித் விபத்தில் சிக்கினார். அவர் சென்ற கார் மூன்றுமுறை பல்டி அடித்தது. Ajithkumar car accident

துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக அவர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவரது கார் விபத்தில் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியானது.

Advertisement

இதனிடையே தற்போது ஸ்பெயினில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டுள்ளார். இன்றைய பந்தயத்தில் அஜித்தின் கார் முன்னே சென்ற மற்றொரு காரை முந்திச் சென்றது.

அந்த கார் நிலை தடுமாறி திரும்பவே, பின்னே சென்ற அஜித்தின் கார் விபத்தில் சிக்கி மூன்று முறை பல்டி அடித்து நின்றது. நடிகர் அஜித் இந்த விபத்தில் உயிர் தப்பினார்.

விபத்து ஏற்பட்ட பின் அவர் காரில் இருந்து இறங்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

குழந்தை பெத்துக்க திருமணம் தேவையில்லை… பிரபல நடிகை கருத்துக்கு எதிர்ப்பு!

குழந்தை பெற்றுக்கொள்ள திருமணம் தேவையில்லை என சமீபத்தில் திவ்யா சத்யராஜ் கூறிய நிலையில், தற்போது பிரபல நடிகையும் அதே கருத்தை பதிவு செய்துள்ளார். அறிவியலின் உச்சக்கட்ட வளர்ச்சி காலம் மாற மாற அறிவியல் உலகம் உச்சக்கட்ட...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...