ரூ.634 கோடி ஊழல்… வசமாக சிக்கும் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகைகள்… யார் யார் தெரியுமா?

கோவை: தமிழகத்தை உலுக்கியுள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் ரூ.634 கோடி ஊழல் குற்றச்சாட்டில், பல்வேறு நடிகைகளுக்கும் தொடர்பிருப்பதாக வெளியான தகவல்கள் சின்னத்திரையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில், எந்தெந்த நடிகைகள் சிக்கப்போகிறார்கள் என்பது குறித்த தகவலை தற்போது காணலாம்.

Advertisement

போலீஸ் கஸ்டடி

தவெக ஆட்சிக்கு வந்த உடன், ‘என்னுடைய மேஜையில் இருக்கும் 3 பைல்களை சரியான நேரத்தில் திறப்பேன்,’ என்று திமுகவுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, இப்போது ஒவ்வொரு பைல்களாக அவர் திறந்து வருகிறார். தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.100 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் வாங்கிய வழக்கில் திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்கு ஏற்கனவே 5 நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், மேலும் 3 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அடுத்த முக்கிய புள்ளி

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மேலும் ஒரு அமைச்சர் விசாரணை வளையத்தில் இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை, திமுக ஆட்சியில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு தான். ஒப்பந்தங்களுக்கு லஞ்சம், பணியிடங்களை நிரப்புவதற்கு லஞ்சம் என சுமார் ரூ.634 கோடியை சுருட்டியதாக புகார் எழுந்தது. அதன்பேரில், நேரு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் கே.என்.நேரு தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். இந்த நிலையில், நேற்றும் மீண்டும் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழப்புத்துறையினர் ரெய்டு நடத்தினர். சென்னை, திருச்சி, கோவை மற்றும் நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், 170 முக்கிய ஆவணங்களும், 13 மின்னணு சாதனங்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

வட்டிக்கு பணம்

சென்னை மாநகராட்சி டெண்டர்கள் மூலம் சம்பாரிக்கப்பட்ட பணத்தை, ஈசிஆர் பகுதிகளில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, துணிக்கடைகள், ஹோட்டல்கள், ஸ்வீட் கடைகள் போன்ற நிறுவனங்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து, அதன்மூலம் பெரும் வருமானத்தை ஈட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

நடிகைகளுக்கு கமிஷன்

இந்த லஞ்ச வழக்கில், கேஎன் நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன், அவரது உதவியாளர் கவி பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய நபர்களாக இருக்கின்றனர். இந்தப் பட்டியலில் தற்போது சின்னத்துரை நடிகைகளின் பெயர்களும் அடிபட்டு வருகின்றன.

அதாவது, கே.என்.நேருவின் உதவியாளர்கள் செல்வமணி, தர்மன் மற்றும் கவிபிரசாத் ஆகியோரின் மூலம், சின்னத்திரை நடிகைகளின் வங்கிக்கணக்குகளுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஊழல் பணத்தை தங்களின் வங்கிக் கணக்கில் இருந்து, அவர்கள் சொல்லும் வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்ய லட்சக்கணக்கில் நடிகைகள் கமிஷன் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்தக் கமிஷன் தொகையின் மூலம் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

எந்தெந்த நடிகைகள்

ரங்கூன் திரைப்பட புகழ் உபாஷனா தான் முக்கிய புள்ளியாக பார்க்கப்படுகிறது. இவர் பல நிறுவனங்களையும் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார். இவர், மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர், செம்பருத்தி உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அதுமட்டுமில்லாமல், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு, தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவர், போட்டோக்கள், வீடியோக்களை பதிவிட்டு, தொடர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

செம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷாபனா. இவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதேபோல, சின்னத்திரை, வெள்ளித்திரையிலும் கலக்கிய கவர்ச்சி நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இவர்கள் மட்டுமல்லாது, இன்னும் பெயர் வெளிவராத நடிகைகளும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளின் முதான உண்மை தன்மை குறித்து அறிந்து கொள்ள, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தால் உண்மை வெளியே வரும். இவர்களின் வங்கிக்கணக்குகள் மட்டுமல்லாது, நடிகைகளின் நெருங்கிய வட்டாரங்களின் வங்கிக்கணக்கு விபரங்களையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

எடுத்தேன் பாரு ஓட்டம்

இது தொடர்பாக அதிமுக ஆதரவாளரும், அரசியல் விமர்சகருமான கிஷோர் கே சுவாமி விடுத்துள்ள எக்ஸ் தளப்பவில்; ED சார் செல்வமணியும், கவிபிரசாத் தர்மனும் பணத்தை ஹவாலா மூலம் வெளிநாட்டுக்கு கொண்டுசென்றது உண்மைதான். அதைமட்டும் விசாரிக்காமல் ரங்கூன் திரைப்பட புகழ் உபாஷனாவின் SRISHA APPARELLS, THASHYA & CO நிறுவனங்களையும், காஸாகிராண்ட் மாடலும், செம்பருத்தி சீரியல் நடிகையும், சென்னை பெருமாநகராட்சியில் பல்வேறு டெண்டர்கள் மூலம் கமிஷன் பெற்று கோடிகளில் செழிக்கும் ஜனனி அசோக்குமாரின் வீட்டிலும் சோதனையிடுங்கள் ஈடி சார்.

ஊழல் பணமெல்லாம் கோச், லூயிவிட்டான் BAG களாக, ECR பங்களா வீடுகளாக, ஈரோடு மெஸ் BRANCH களாக, ஆடை நிறுவனங்களாக, EVENT MANAGEMENT நிறுவனங்களாக உருமாறி உள்ளதாக தகவல்.

இப்படி மாட்டுவோம் என தெரிந்தே SOCIAL MEDIA வில் ஆக்டிவாக இருக்கவேண்டிய EVENT MANAGEMENT கம்பெனியின் நிறுவனர் உபாஷனா ஐயர், அனைத்து SOCIAL MEDIA பக்கங்களையும் மூடிவிட்டு “எடுத்தேன் பாரு ஓட்டம்” என்ற தோரணையில் ஓடினாரோ?, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Flipkart Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

அக்கா முதல் அவராச்சன் & சன்ஸ் வரை… இந்த வார ஓடிடி ரிலீஸ் தெரியுமா?

கோவை: இந்த வாரம் வெளியாகப் போகும் ஓடிடி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைப் பற்றி தற்போது காணலாம். காலம் மாற மாற சினிமாவின் அத்தியாயமும் மாறிக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் தியேட்டர்களில் வரும் படங்களுக்கே...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...