கோவை கொடிசியாவில் துவங்குகிறது பில்ட் இன்டெக் 2026 கண்காட்சி…

கோவை: கோவை கொடிசியாவில் பில்ட் இன்டெக் 2026 கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது.

Advertisement

டெல்லி, குஜராத், ஹரியானா கர்நாடகா,கேரளா,மகாராஷ்டிரா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து முதலீட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் சுமார் 40,000 மேற்பட்டோர் கலந்து கொள்ளும் கொடிசியா பில்ட் இன்டெக் 2026 கண்காட்சி பிப்ரவரி 6ம் தேதி முதல் துவங்க உள்ளது.

கோவை கொடிசியா வணிக வளாகத்தில் கொடிசியா பில்ட் இன்டெக் 15-வது பதிப்பு 2026 கண்காட்சி வரும் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக Jindal Realty CRO அபே குமார் மிஸ்ரா மற்றும் கௌரவ விருந்தினராக L&T Head Precast Division அமித் தீபிப் பார்டே கலந்து கொள்கின்றனர்.

இந்த கட்டுமான கண்காட்சியில் கட்டிடம் மற்றும் கட்டுமான பொருட்கள் முழுவதும் இடம் பெற்றிருக்கும். ப்ரிகாஸ்ட் மற்றும் தொழில்சார் கட்டுமான முறைகள் குறித்து கட்டுமான தொழில் நுட்பங்களில் எதிர்கால வளர்ச்சி குறித்து சிறப்பு கருத்து பகிர்வு மற்றும் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.

Advertisement

இந்த கண்காட்சியில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 40,000 மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். அதேபோல டெல்லி, குஜராத், ஹரியானா கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து பார்வையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

பிப்ரவரி 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கொடிசியா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தமிழ்நாடு பாடத்திட்டம் எப்படி இருக்கும்?- மயில்சாமி அண்ணாதுரை கூறிய தகவல்…

கோவை: அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மருத்துவர் பெரியசாமி தலைமையில்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.