கே வி என் தயாரிப்பு நிறுவனம் தணிக்கை சான்று பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் வழக்கை வாபஸ் வாங்கி விட்டு தணிக்கை குழுவிடம் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தணிக்கை சான்று பெறுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் வழக்கு தொடர்பான அறிவிப்புகள் குறித்தும் சென்சார் போர்ட் உயர் அதிகாரிகள் ஜனநாயகன் படம் குறித்து வாய் திறக்காத இந்த சூழலில் ஜனநாயகன் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், அஹிம்சா என்டர்டெயின்மென்ட் “Soon” எனக் குறிப்பிட்டு சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் நம்பிக்கையுடன் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் காக வெயிட் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

மேலும், விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கான சிக்கல்கள் தீர்ந்துவிட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் உறுதியான தகவல்களை கூறி வருகின்ற நிலையில், சீக்கிரமே ஜனநாயகன் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக மூன்று நாளில் ஜனநாயகன் படத்திற்கான தணிக்கை சான்று கிடைத்துவிடும் என நம்பப்படுகிறது.
இந்த திரைப்படம் எதிர்பார்த்த படி பிப்ரவரி 20-ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறி வருகின்றனர். ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால், அஹிம்சா என்டர்டெயின்மென்ட் வெளியிட்ட இந்த ட்விட்டை பார்த்த ரசிகர்கள் நீங்க ரிலீஸ் டேட் மட்டும் சொல்லுங்க, வசூல் புரட்சியை எப்படி கொண்டு வந்து கொட்ட வேண்டும் என்பதை நாங்க பார்த்துக்குறோம் என ரசிகர்கள் ஃபயர் மோடில் ரெடியாகிவிட்டனர்.
ஜனநாயகன் ரிலீஸ் மற்றும் தேர்தல் நெருங்கி வருவது என விஜய் இதனிடையே செம பிஸியாகி விடுவார் என்றே தெரிகிறது. தேர்தலுக்கு முன்னர் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவது விஜய்க்கு பெரிய பலம் தான் என்று ஏற்கனவே ஏகப்பட்ட கருத்துக்கணிப்புகளில் மக்கள் ஆதரவு விஜய்க்கு என்று வெளிப்படையாகவே தெரிந்த நிலையில், அரசியல் விமர்சனர்களும் ஜனநாயகன் திரைப்படம் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Andha padam vandha enna …varalana enna….andha padatha pakara selavuku….20 gm silver vangi pota… value avadu erum
Useless Fellow. People followers are Idiots
Useless Fellow. People followers are Idiots