Coimbatore Biryani Spots: குடும்பத்துடன் செல்ல ஏற்ற கோவையின் சூப்பர் பிரியாணி கடைகள்..!

கோயம்புத்தூர் பிரியாணிக்கு ஒரு பிரபலமான இடமாகும். இங்கு என்ன பிரியாணி எங்கு கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் எத்தனையோ இருந்தாலும், நம் உணர்வோடு கலந்து மனதோடு நிறைந்த ஒன்றாகிவிட்டது பிரியாணி. கிராமங்களில் கிடாவெட்டு நிகழ்வில் கூட தற்போது, பிரியாணி இடம்பெறும் அளவுக்கு அது தமிழர்களின் எல்லா மாவட்டங்களுக்கும் சென்று சிறப்பு பெற்று விட்டது.

Biryani NCC 4

மூன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் அவர்களின் முதல் தேர்வு பிரியாணி. ட்ரீட் என்றதும், ஞாபகத்திற்கு வருவது பிரியாணி தான். பிரியாணி எங்கே டேஸ்டா கிடைக்கும் என்றுதான் நாம் அனைவரும் தேடுவோம். எத்தனை முறை சாப்பிட்டாலும், சலிக்காத அழுக்காத உணவு பிரியாணி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேடி தேடி சுவைப்பதும் பிரியாணியை தான்.

Biryani NCC 4

பெரும்பாலும் நகரங்களில் ஸ்ட்ரீட் லைட் இருக்கோ இல்லையோ தெருவுக்கு ஒரு பிரியாணி கடை இருப்பது நிதர்சனமான உண்மை. மொத்தத்தில், பிரியாணியை நினைத்தாலே நாக்கில் உமிழ்நீரை வரவிருக்கும் சக்தி படைத்த ஒன்றாகிவிட்டது.

ஹைதராபாத், திண்டுக்கல், கல்கத்தா, ஆற்காடு, லக்னோ, தலசேரி, மலபார், சிந்தி, பாம்பே… என பிரியாணியின் வகைகளின் பட்டியல் நீள்கிறது. அந்த வகையில் நம்ம ஊரில் உள்ள சிறந்த சில பிரியாணி கடைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Biryani NCC 4

கோயம்புத்தூரில் பல இடங்களில் பிரபலமான ஜூனியர் குப்பண்ணா ஹோட்டல்கள் உள்ளன. காந்திபுரம், கவுண்டம்பாளையம், அவினாசி ரோடு (KMCH அருகில்) மற்றும் டவுன் ஹால் ஆகிய முக்கிய இடங்களில் ஜூனியர் குப்பண்ணா ஹோட்டல் கிளைகள் அமைந்துள்ளன.

கொங்கு நாட்டு அசைவ உணவுகள், பிரியாணி மற்றும் மட்டன் சுக்கா, மீன் வறுவல் போன்றவை இங்கு மிகவும் பிரபலமான உணவுகளாகும். பொதுவாக ஜூனியர் குப்பண்ணா ஹோட்டல் காலை 11:30 முதல் இரவு 10:30 மணி வரை செயல்படும்.

junior kuppanna NCC

இங்கு பிரியாணி, கொங்கு நாட்டு அசைவ உணவு, தென்னிந்திய, சைனீஸ் மற்றும் சீஃபுட் கிடைக்கின்றன. பிரியாணியின் ரேட் சுமார் இருவருக்கு ₹700 ஆக வாங்கப்படுகிறது. குடும்பத்துடன் அசைவ உணவை சுவைக்க இது ஒரு சிறந்த இடம் என்று சொல்லாம்.

இந்த கடையின் இணையதளம் https://kuppanna.com/

கோயம்புத்தூர் பீளமேடு, நவா இந்தியா சாலையில் EB அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள அலிஃப் பாரடைஸ் பிரியாணி, பிரியாணி, முகலாய், மற்றும் சீனா உணவுகளுக்குப் பெயர் பெற்ற உணவகம். இது தினமும் இரவு 11:45 மணி வரை செயல்படுகிறது.

Briyani NCC

இங்கு மதிய உணவு, இரவு உணவு மற்றும் பார்சல் வசதிகள் உள்ளன. சுவையான சிக்கன் பிரியாணி மற்றும் பார்பிக்யூ (Barbeque) உணவுகள் கிடைக்கும். இருவருக்கு சுமார் ₹450 – ₹600 ஆக வாங்கப்படுகிறது. காந்திபுரம் மற்றும் டவுன் ஹால் (கிளாக் டவர் அருகில்) போன்ற பிற இடங்களிலும் இவர்களின் கிளைகள் உள்ளன.

இந்த கடையின் இணையதளம்https://www.foodchow.com/alifparadisebiriyanipeelamedu

கோயம்புத்தூர் காந்திபுரத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் வேணு பிரியாணி ஹோட்டல் அதன் அசல் திண்டுக்கல் சீரக சம்பா மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் 65-க்கு புகழ்பெற்றது. இது காலை 11 மணி முதல் இரவு 10:15 மணி வரை (குறிப்பிட்ட கிளைகளில் மாறுபடலாம்) இயங்குகிறது. மேலும் பார்சல் மற்றும் ஏசி வசதிகளுடன் சிறந்த அசைவ உணவகமாக செயல்படுகிறது.

venu briyani NCC

சீரக சம்பா மட்டன்/சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, வாத்து வறுவல், முட்டை வறுவல் உள்ளிட்ட உணவுகள் கிடைக்கும். காந்திபுரம், சாய்பாபா காலனி, மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது. இருவருக்கு தோராயமாக ₹500 – ₹600 ஆக வாங்கப்படுகிறது. வாழை இலையில் பரிமாறப்படும், தரமான மற்றும் சுவையான திண்டுக்கல் பாணி பிரியாணிக்கு இது கோயம்புத்தூரில் ஒரு சிறந்த இடமாகும்.

இந்த கடையின் இணையதளம்https://www.tripadvisor.in/Restaurant_Review-g1023973-d2318731-Reviews-Venu_Biriyani_Hotel_Restaurant-Dindigul_Dindigul_District_Tamil_Nadu.html

HMR பிரியாணி ஹட் கோயம்புத்தூரில் உள்ள மிகவும் பிரபலமான அசைவ உணவகங்களில் ஒன்றாகும். இது சுவையான மற்றும் மலிவான பிரியாணிக்கு (குறிப்பாக பீஃப் மற்றும் சிக்கன்) பெயர் பெற்றது. இது ஆர்.எஸ்.புரம், ராமநாதபுரம் மற்றும் உக்கடம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது.

HMR NCC

காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும். இந்த உணவகத்தில் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு பிரியாணி, கறி வகைகள் மற்றும் பரோட்டா சிறந்த தேர்வாகும். பீஃப் பிரியாணி (Garlic Beef), சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, மற்றும் கறி வகைகளுக்குப் பெயர் பெற்றது. இரண்டு பேருக்குச் சுமார் ₹350 – ₹500 வரை ஆகலாம் (மலிவான விலை) ஆக வாங்கப்படுகிறது.

பொதுவாக காலை 11:00 AM முதல் இரவு 11:00 PM வரை திறந்திருக்கும். அசைவப் பிரியர்களுக்குச் சிறந்த இடம், குறிப்பாகப் பரோட்டா மற்றும் பிரியாணிக்கு பெயர் பெற்றது.

இந்த கடையின் இணையதளம்https://www.tripadvisor.in/Restaurant_Review-g297675-d8620636-Reviews-Hmr_Biriyani_Hut-Coimbatore_Coimbatore_District_Tamil_Nadu.html

கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான D.R. பிரியாணி – சிவாஜி கடை, குறிப்பாக குனியமுத்தூர் மற்றும் ஆர்.எஸ். புரம் (காந்தி பார்க்) பகுதிகளில் இயங்குகிறது. மட்டன் பிரியாணி, சுத்துக்கொழுப்பு வறுவல் மற்றும் அசைவ வகைகளுக்குப் பெயர் பெற்ற, மலிவு விலை மற்றும் சுவையான உணவகமாகும்.

D.R. Biriyani - Sivaji Store NCC

மதியம் 12 மணி முதல் கடை செயல்படுகிறது. டைன்-இன் (Dine-in), பார்சல் மற்றும் டெலிவரி வசதிகள் உள்ளன. கோவை மக்களின் சுவைக்கு ஏற்ற, பட்ஜெட்-பிரண்ட்லி அசைவ உணவகம் இதுவாகும்.

கோயம்புத்தூரில் ஆம்பூர் ஸ்டார் பிரியாணி முக்கியமாக ஆர்.எஸ்.புரம், சித்ரா (KMCH எதிரே) மற்றும் நவக்கரையில் கிளைகளைக் கொண்டுள்ளது. 1890-களில் இருந்து பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இவர்களின் பிரியாணி, குறிப்பாக ஆம்பூர் பிரியாணி வகை, சீரக சம்பா அரிசி மற்றும் தனித்துவமான மசாலாக்களுக்கு பெயர் பெற்றது.

NCC D.R. Biriyani - Sivaji Store

காலை 11:00 முதல் இரவு 11:00 மணி வரை செயல்படுகிறது. ஆம்பூர் பிரியாணி (சிக்கன், மட்டன்), கபாப், மற்றும் சீன உணவுகளுக்கு பெயர் பெற்றது. ஆன்லைன் டெலிவரி, பார்சல் மற்றும் உட்கார்ந்து உண்ணும் வசதி உள்ளது. நேரு ஸ்டேடியம் மற்றும் ஆர்.எஸ்.புரம் கிளைகள் மிகவும் பிரபலமானவை.

இந்த கடையின் இணையதளம்https://www.amburstarbriyani.com/

மேலும் உங்களுக்குத் தெரிந்த பிரியாணி கடைகளை கீழே கமெண்ட் பாக்சில் பதிவிடலாம் வாசகர்களே…

Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன செய்யலாம்? என்ன கூடாது?

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.