விஜய் 1% ஓட்டு வாங்குவாரா- கோவையில் எல்.முருகன் சாடல்…

கோவை: விஜய் 1% ஓட்டு வாங்குவாரா என பாருங்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement

1998ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு, 28ம் ஆண்டு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பு செயலாளர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

முன்னதாக, குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேசியதாவது:-

Advertisement

கோவை இதே நாளில் 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்பில் 58 பேருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளோம், இது கோவைக்கு கருப்பு நாள்,கோவையின் வளர்ச்சிக்கு எதிரான நாள், கோவைக்கு கோரமான நாள்.

இதே நாளில் புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் தீவிரவாதிகள் அவர்களின் கொட்டத்தை அடக்க பிரதமர் வந்துள்ளார். பிரதமரின் கையில் இந்த நாடு பாதுகாப்பாக உள்ளது.

1998ல் அத்வானி சிறிது தாமதமாக வந்ததால் அவர் தப்பினார். அன்று குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற கூடாது என மருத்துவமனையிலும் குண்டு வெடித்தார்கள்.

அந்த சம்பவத்தில் காயமடைந்த அவர்கள் இன்றும் ஊனத்துடன் நடமாடி கொண்டிருக்கிறார்கள். கோவையின் வளர்ச்சி குண்டு வெடிப்பால் பின்நோக்கி சென்றுள்ளது.

குண்டு வெடிப்புக்கு முன்பு பிற மாநிலம் கூட கோவை அளவிற்கு முன்னேற்றத்துடன் இல்லாமல் இருந்தது. ஆனால், நாம் தற்போது பின் தங்கி உள்ளோம். கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நடைபெற்ற குண்டு வெடிப்பை திமுக அரசை சிலிண்டர் வெடிப்பு என்றர்கள், ஆனால் NIA அதனை கையில் எடுத்து பின்னணி கண்டறியப்பட்டது.

நம் முயற்சியாலும் NIA முயற்சியாலும் கோட்டை ஈஸ்வரன் கோவில் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் திமுக அரசு ஓட்டு வங்கிக்காக அதனை சிலிண்டர் வெடிப்பு என கூறி உள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக உள்ளது. நீதிபதி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகிறார்கள் திமுகவினர் மிக விரைவில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்.

மேலும், இங்கு நம் ஆட்சி வந்தவுடன் இங்கு நினைவு தூண் இருக்கும். பல்லுக்கு பல் கல்லுக்கு கல் என்று ஒரு முறை அடித்தால் 10,000 முறை திருப்பி அடிப்போம் அது தான் புதிய பாரதம் அதுதான் ஆப்ரேஷன் சிந்தூர். தீவிரவாதிகள் 11 ஆண்டுகளாக வாலை சுருட்டி கொண்டிருக்கிறார்கள்.

கோவையில் 28 ஆண்டுகளுக்கு முன்பு 1998 பிப்ரவரி மாதம் 14ம் தேதி அத்வானி அவர்களின் பரப்புரை கூட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்,அதில் உயிரிழந்தவர்கள் புகழ் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் ஆட்சி, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடந்து வருகிறது. இதனை மூடி மறைக்க 5000 ரூபாய் நாடகத்தை நடத்துகிறார்கள் மேலும் ஆட்சி முடியும் போது முன் கூட்டியே நடத்துகிறார்கள்.

மகளிர் உரிமை தொகையை தடுக்க பார்க்கிறார்கள் என முதல்வர் பேசியிருந்தது தொடர்பான கேள்விக்கு யார் தடுக்க முடியும் அது அரசு தரும் நிதி முதல்வர் தடுக்க நினைப்பதாக கூறுகிறார் என்றால் அதற்கு ஆதாரம் உள்ளதா? மேலும் தமிழ்நாட்டு சகோதரிகள் திமுக மீது கோபத்தில் இருப்பவர்கள்.

பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக அமைச்சர் கலந்து கொள்ளாதது குறித்தான கேள்விக்கு அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காதது திமுகவிற்கு புதிது அல்ல அரசியலமைப்பு சட்டத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரை புறக்கணிக்க வேண்டும் அவமதிக்க வேண்டும் என தொடர்ந்து திமுக இவ்வாறு நடந்து கொள்கிறது.

பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி செயல்பாடு பூஜ்ஜியம் என்றும் அவர்களது கூட்டணி கட்சிக்காரர்களே காங்கிரஸ் கட்சியுடன் சண்டைக்கு செல்கிறார்கள். நீங்கள் தான் பேச மறுக்கிறீர்கள் நாங்களாவது பொது மக்களுக்காக பேசுகிறோம் என்று சிறிய சிறிய கட்சிகளில் உள்ள எம்பிகள் பேசுகிறார்கள், காங்கிரஸ் கட்சி மீது மற்ற கட்சியினர் கோபமாக பாராளுமன்றத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

ராகுல் காந்தி புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பதில்லை.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்ற கட்சிகளை மக்கள் டெலிட் செய்து விட்டார்கள் என்று கூட்டத்தில் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக அதிமுக கூட்டணிக்கு இன்னும் 60 நாட்கள் தான் உள்ளது எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

விஜய் 30% உள்ளது என கூறுவதற்கு ஆதாரம் உள்ளதா? ஆக்க பூர்வமாக சர்வே எடுத்தார்களா?

சேலம் தமிழக வெற்றி கழகம் கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான கேள்விக்கு? அந்தக் கட்சியினர் அதில் கவனம் செலுத்த வேண்டும் எங்கள் கட்சிகளை பாருங்கள் பிரதமர் வரும் பொழுது லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்தார்கள் எங்கள் கூட்டம் நடக்கும் போது எவ்வளவு ஒழுக்கமாக கட்டுப்பாடுகளுடன் இருந்தது, அவர் இதையெல்லாம் புதிய கட்சிகள் எங்களிடம் அதனை கற்று கொள்ள வேண்டும்.

விஜய் 1% ஓட்டு வாங்குவாரா என்று பாருங்கள் யாராவது அறிவுப்பூர்வமாக அறிவியல் ரீதியாக சர்வே எடுத்து இத்தனை சதவிகிதம் என்று கூறி இருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பிய அவர் தேர்தல் வந்தால் தான் மக்கள் ஓட்டுகள் தெரியும். நம்முடைய மக்கள் தெளிவானவர்கள் வளர்ச்சியை யார் கொடுக்க முடியும் என்று பார்ப்பவர்கள் பிரதமர் வளர்ச்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார், தேசிய ஜனநாயக கூட்டணி தான் முன்னேற்றத்தை கொடுக்க முடியும் என்று மக்கள் எண்ணுகிறார்கள்.

விஜய் பாஜகவின் B Team என்று பலரும் கூறி வருவது தொடர்பான கேள்விக்கு இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.

இத்தை கேள்விகளுக்கு பதிலலித்த அவர், நயினார் நாகேந்திரன் விஜய் திரிஷா பற்றி பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள் என்று பலமுறை அது குறித்து கேள்வி கேட்டும் பதில் அளிக்க மறுத்து சென்றார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...