கோவையில் 250 ரூபாய்க்காக ஜெயிலுக்குச் சென்ற வாலிபர்!

கோவை: கோவையில் சாலையில் நின்றிருந்த இளைஞரிடம் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவைப்புதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கவுதம்(26). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று சுகுணாபுரம் செந்தமிழ் நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தார்.

Advertisement

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கவுதமிடம் பணம் தருமாறு கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தியைக் காட்டி மிரட்டி கவுதமிடம் இருந்த ரூ. 250ஐ பறித்துத் தப்பி சென்றார்.

இது குறித்து கவுதம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

Advertisement

அதில், பணம் பறித்தது குனியமுத்தூர் இடையர்பாளையம் பிரிவு மணிகண்டன் நகரை சேர்ந்த சுமேஷ்(29) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Amazon Link 3
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

கோவை மாணவன் அகிலன் வழக்கு: குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நிவாரணம்; சகோதரிக்கு அரசு வேலை

கோவை: பள்ளி மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அகிலனின் சகோதரிக்கு அரசு பணி நியமன ஆணை...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...