கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாண்புமிகு மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மேயர் அவர்களிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 20 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீ வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்புபெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம்கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.

இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 3 மனுக்களும்மேற்கு மண்டலத்தில் 2 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 5 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 6 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 4 மனுக்களும் ஆகமொத்தம் 20 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

Advertisement

இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர், இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இக்கூட்டத்தில், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் சுல்தானா, நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், மண்டல சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Advertisement

coimbatore-mayor-rangnayaki-grievance-day-meeting-20-petitions

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 20 மனுக்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க மேயர் ரங்கநாயகி அறிவுறுத்தினார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...