கோவையில் 598 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள்…

கோவை: கோவையில்
598 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி பராஜ்குமார் வழங்கினார்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 598 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை ரூ.21.71 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், சூலூர் பேரூராட்சிதலைவர் தேவி மன்னவன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி பராஜ்குமார் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டம்சூலூர் உள்வட்டமான காடாம்பாடி. கண்ணம்பாளையம், ராசிபாளையம், சூலூர்கலங்கல் ஆகிய கிராமம் பகுதிகளை சோர்ந்த 151 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும், இருகூர் உள்வட்டமான இருகூர், ஒட்டர்பாளையம், பீடம்பள்ளி ஆகிய கிராமம் பகுதிகளை சோர்ந்த 215 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும்,

Advertisement

கருமத்தம்பட்டி உள்வட்டமான அரசூர், காடுவெட்டிபாளையம், கணியூர், கரவழிமாதப்பூர், கருமத்தம்பட்டி, மோப்பிரிபாளையம், மைலம்பட்டி நீலம்பூர், செம்மாண்டம்பாளையம் ஆகிய கிராமம் பகுதிகளை சோர்ந்த 172 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், செலக்கரிச்சல் உள்வட்டமான பச்சாபாளையம் கிராமம் பகுதிகளை சோர்ந்த 59 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும் மற்றும் வாரப்பட்டி உள்வட்டமான வாரப்பட்டி கிராமம் பகுதிகளை சோர்ந்த 01 பயனாளிகளுக்கு என மொத்தம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 598 பயனாளிகளுக்கு வீட்டுமனைபட்டாக்கள் ரூ.21.71 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பள்ளி முடிந்து வீடு திரும்பாத மாணவி- ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த கோவை காவல்துறை…

கோவை: கோவையில் பள்ளி முடிந்து வீடு திரும்பாமல் காணாமல் போன மாணவியை ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் காணாமல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...