மகளிர் உரிமைத்தொகை- கோவையில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசிய அம்மன் அர்ஜுனன்…

கோவை: சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

NDA கூட்டணி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும், திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் சில முக்கிய தலைவர்களின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இன்று காலை சி.வி.சண்முகம் நடிகை நயன்தாரா குறித்து பேசியதும், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெண்களின் உடை குறித்து பேசியதும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

இந்நிலையில், கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் கோவை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுகவின் மாவட்ட செயலாளருமான அம்மன் அர்ஜுனன் பேசுகையில் குடும்பத்தலைவிகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை குறித்து குறிப்பிடும் போது திமுகவினர் ”மூக்குத்தி இருக்கிறதா? கம்மல் இருக்கிறதா? என்பது போல், விட்டால் புருஷன் இருக்கிறாரா? என கேள்வி எழுப்புவார்கள்” என்று அவர் பேசியுள்ளார்.

தற்போது அந்த வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகையை பெறும் பெண்களை சந்தேகிக்கும் வகையில் கேள்வி கேட்பார்கள் என்பதைப் போல் அம்மன் அர்ஜுனன் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

முதல்வர் விஜய் அரசின் முதல் பட்ஜெட் திருப்தியளித்ததா? கோவை தொழில்துறையினர் சொல்வது இதுதான்!

கோவை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முதல்முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இதில், தொழில்துறையினருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, தொழில்துறையினரை திருப்தியடையச் செய்ததா? என்பதை இந்தத்...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...