மேற்கு மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு!

கோவை: மேற்கு மண்டல மாவட்டங்களில் தேர்தலையொட்டி 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி என 8 மாவட்டங்களிலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Click here to read news பீளமேட்டில் ஜிபே மூலம் வாலிபரிடம் வழிப்பறி… மக்களே உஷார்! 

Advertisement

மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி என 8 மாவட்டங்களில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒட்டு சாவடிகள் உள்ளது.

இந்த ஓட்டு சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்காக மேற்கு மண்டல மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட உள்ளனர்.

Advertisement

Read Also: Coimbatore Crime News: மக்களே உஷார்… 77 நாட்களில் ரூ.15 கோடி மோசடி!

கர்நாடக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர். சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் போலீசாரும், ஊர்காவல் படையினர், முன்னாள் போலீசாருக்கும் தேர்தல் பணி வழங்கப்பட உள்ளது.

தேர்தல் அன்று ஓட்டு பதிவு முறையாக, சரியாக நடக்க அனைத்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நிழல்’ QR Code-ல் குவியும் தகவல்கள்… 2,000-க்கும் மேற்பட்ட தகவல், 7 வழக்குகள் பதிவு!

கோவை மாவட்ட காவல்துறையின் ‘நிழல்’ கியூஆர் கோடு திட்டம் மூலம் இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட தகவல்கள் பெறப்பட்டுள்ள நிலையில், 145-க்கும் மேற்பட்ட புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. ரகசியத் தகவல்களின் அடிப்படையில் 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...