அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… கோவை முதல் மதுரை வரை யார் யார்?

சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனிடையே, அதிமுக சார்பில் வேட்பாளராக களமிறங்கக்கூடிய 23 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த பட்டியலை இங்கு பார்க்கலாம்:-

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் களம் காண்கிறார்.

முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளர்களாக களம் காண உள்ளனர்.

முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன், நத்தம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

AIADMK candidate list

முன்னாள் அமைச்சர்களான தங்கமணி குமாரபாளையம் தொகுதியிலும், ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும், சிவி சண்முகம் மயிலம் தொகுதியிலும், செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் அமைச்சரும் தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் கே பி அன்பழகன் பாலக்கோடு தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் காமராஜ் நன்னிலம் தொகுதியிலும் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள், ஓ எஸ் மணியன் வேதாரண்யம் தொகுதியிலும், சி விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியிலும், கடம்பூர் ராஜூ கோவில்பட்டி தொகுதியிலும், ஆர் பி உதயகுமார் திருமங்கலம் தொகுதியிலும், கே டி ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியில் போட்டியிட உள்ளனர்.

முன்னாள் அமைச்சர்களான பெஞ்சமின் மதுரவாயல் தொகுதியிலும், அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலசபாக்கம் தொகுதியிலு்், ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதியிலும், கருப்பண்ணன் பவானி தொகுதியிலும், வீரமணி ஜோலார்பேட்டை தொகுதியிலும், விஜயபாஸ்கர் கரீரிலும், ராஜேந்திரன் அரியலூர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

Read Also: Coimbatore Crime News: மக்களே உஷார்… 77 நாட்களில் ரூ.15 கோடி மோசடி!

அதிமுக.,வின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் பட்டியல் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

விஜய்யை விளாசிய நடிகை… திமுகவில் ஐக்கியம்.!

தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த அக்கட்சி நிர்வாகியும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் திமுகவில் இணைந்துள்ளார். நடிகர் விஜயின், அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா என அனைத்திலும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக அரசியல்...

Video