DMK candidates Coimbatore: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் கோவை மாவட்டத்துக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 7 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. மீதமுள்ள 3 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, கூட்டணி கணக்கீடு மற்றும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கோவை மாவட்டம் வழக்கம்போல இந்த முறையும் முக்கிய அரசியல் கவனம் பெறும் மாவட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
தற்போதைய வேட்பாளர் பட்டியலின்படி, கோவை தெற்கு தொகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை வடக்கு தொகுதியில் துரை செந்தமிழ் செல்வன், தொண்டாமுத்தூர் தொகுதியில் என்.ஆர். கார்த்திகேயன், சூலூர் தொகுதியில் தளபதி முருகேசன், கிணத்துக்கடவு தொகுதியில் சபரி கார்த்திகேயன், வால்பாறை தொகுதியில் சுதாகர், மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரம் மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொமதேக சர்பில் நித்தியானந்தம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய முக்கிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால், இந்த தொகுதிகளில் யார் களம் காண்பார்கள் என்ற எதிர்பார்ப்பு கூட்டணி வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
கோவை மாவட்ட திமுக வேட்பாளர் பட்டியல்:
- கோவை தெற்கு – செந்தில் பாலாஜி
- கோவை வடக்கு – துரை செந்தமிழ் செல்வன்
- தொண்டாமுத்தூர் – என்.ஆர். கார்த்திகேயன்
- சூலூர் – தளபதி முருகேசன்
- கிணத்துக்கடவு – சபரி கார்த்திகேயன்
- வால்பாறை – சுதாகர்
- மேட்டுப்பாளையம் – கவிதா கல்யாணசுந்தரம்
- பொள்ளாச்சி – நித்தியானந்தம்
- கவுண்டம்பாளையம் – காங்கிரஸ்
- சிங்காநல்லூர் – காங்கிரஸ்.

