வேட்பாளர்களுக்குள் வாக்குப்போட்டி என்பது ஆரோக்கியமான விஷயம்- செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்…

கோவை: வேட்பாளர்களுக்குள் வாக்கு போட்டி இருப்பது ஆரோக்கியமான விஷயம் தான் என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திமுக தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தில் மேற்கு மண்டல திமுக பொறுப்பாளரும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதி திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் பணிகளை எவ்வாறு ஆற்றினால் பெற்றி கிடைக்கும் என்றும் அவர்களுக்கான தேவைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும் வாக்காளர்களை சந்திப்பது வாக்கு பெறுவது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களும் இந்த முறை திமுக வெற்றி பெற பாடுபடுவோம் அதற்கு கூட்டணி கட்சிகளும் அதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி, கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் வெற்றி நம் அனைவருக்குமானது என தெரிவித்தார்.

நான் ஒவ்வொரு வீதியிலும் நடந்து சென்று வாக்குகளை சேகரிக்கிறேன் என்று கூறிய அவர் இங்குள்ள மற்ற வேட்பாளர்கள் யாரெல்லாம் நடந்து சென்று வாக்கு சேகரிக்கிறார்கள் என்று பார்க்கலாம். குறைந்த நாட்களே இருப்பதால் நம்மால் முடிந்த வரை அதிகப்படியான வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை பெற வேண்டும் அதற்கு தகுந்தார் போல் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

வாக்குகளை பெறுவதில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் இடையே போட்டிகள் இருப்பது ஆரோக்கியமான விஷயம் தான் என்று தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் இதுபோன்ற அனைத்து கட்சி கூட்டங்களையும் கூட்டி தேவைகளையும் ஆலோசனைகளையும் பெறலாம் இங்குள்ள தோழமைக் கட்சிகளும் எங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து தோழமைக் கட்சிகள் பல்வேறு ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கி உள்ளதாகவும் கோவை மாவட்டத்தின் தேர்தல் பணிகளை எடுத்து செல்வதற்கு இந்த ஆலோசனை கூட்டம் மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

வாக்கு சேகரிக்க செல்லும் இடத்தில் நல்ல எழுச்சியான வரவேற்பு அளிக்கிறார்கள் என்றும் அதற்குக் காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என தெரிவித்தார். முதலமைச்சர் மீது வைத்துள்ள நம்பிக்கை தான் நான் வாக்கு சேகரிக்க செல்லும் பொழுது உற்சாகமான வரவேற்பு தருவதற்கு காரணமாக உள்ளது என தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதியின் திட்டங்களை பொருத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் வழங்கி உள்ளார் என்றும் நாம் பொறுப்பு அமைச்சராக நான் கோவைக்கு இருந்த பொழுது கூட பல்வேறு திட்ட பணிகளை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் துவக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் கோவையின் வளர்ச்சிக்கு இன்னும் சிறப்பு கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பை முதலமைச்சர் எனக்கு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

வாக்காளர்களை சந்திக்கும் பொழுது புளியகுளம் பகுதியில் பட்டாக்கள், சமுதாயக்கூடம் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள் என்றும் அவற்றையெல்லாம் நாங்கள் குறித்து வைத்துக் கொண்டிருக்கிறோம் அரசு அமைந்த உடன் அந்த கோரிக்கைகள் குறைந்த காலத்திற்குள் நிறைவேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

முதலமைச்சர் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் துணை முதல்வரும் கோவைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார். கமலஹாசன் கோவையில் ஆதரவு பிரச்சாரம் மேற்கொள்வாரா என்ற கேள்விக்கு அறிவிப்பு வந்தவுடன் அதனை அறிவிக்கிறோம் என்று பதில் அளித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

நெஞ்சை நிமிர்த்தி வானதி சீனிவாசனுக்கு ஓட்டு கேட்கலாம் – எஸ்.பி.வேலுமணி!

அதிமுக தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்தி வானதி சீனிவாசனுக்கு ஓட்டு கேட்கலாம் என எஸ்.பி. வேலுமணி கூறி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை நம்பிக்கை தெரிவித்தார்.

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...