கோவை: வானதி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளருமான வானதி சீனிவாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வானதி சீனிவாசன் கூறியதாவது, உங்களது அன்பினாலும், பிரார்த்தனையாலும்
விரைவாக உடல்நலம் தேறிக் கொண்டு இருக்கிறேன். ஓரிரு நாட்களில் உங்களை சந்திக்க உள்ளேன்.
நமது தேர்தல் பிரச்சாரம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் எனக்காக தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருக்கும் ஒவ்வொரு சகோதர, சகோதரிகளுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
பிரதமர் மோடி பூத் கமிட்டி நிர்வாகிகள் உடன் கலந்துரையாட உள்ளார். எனது பூத் வலிமையான பூத் என்ற கலந்துரையாடலில் நமோ ஆஃப் செய்தி மூலம் இணைந்து, அவருடன் கலந்துரையாடி இந்த நிகழ்வை வெற்றிகரமாக மாற்ற வேண்டும்.
தமிழகத்தின் மீது அன்பும், ஆற்றலின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்துள்ள பிரதமர் மோடிக்கு, வெற்றியின் மூலம் நமது அன்பினை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.






Comments are closed.