ஸ்டாலின் ஒரு Culprit- ஆவேசம் கொண்ட டெல்லி முதல்வர்…

கோவை: ஸ்டாலின் ஒரு Culprit என்றும் பெண்களுக்கு எதிரானவர் என்றும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் இந்த தருணத்தில் அனைத்து பெண்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும், முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதித்து வருகிறார் என தெரிவித்தார்.

திருச்சியில் கூட திமுகவின் இலவச கூப்பன் விவகாரம் தொடர்பாக ஒரு பெண் திமுக குண்டர்களால் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் அந்த பெண்ணை அவமதித்து இழிவு படுத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் ஒரு பாதுகாப்பற்ற அரசாங்கம் என்று தெரிவித்த அவர் இங்கு Delimitationக்கு எதிராக போராட்டம் மேற்கொள்கிறார்கள் ஆனால் அது பெண்களுக்கு சாதகமான ஒன்றுதான் என்று தெரிவித்தார்.

Advertisement

இவர்கள் (திமுக) பெண்கள் முன்னேற வேண்டாம் என்று நினைக்கிறார்கள் திமுகவின் உதயசூரியன் சின்னம் என்பது உதயசூரியன் அல்ல அஸ்தமனமாக கூடிய சூரியன் என்று விமர்சித்தார். மேலும் முதல்வர் பெண்களுக்கு எதிரானவர் அவர் ஒரு Culprit என ஆவேசமாக தெரிவித்தார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...