உன்னை செருப்பாலயே அடிப்பேன்.. திவாகரை ஒருமையில் திட்டிய பிரபலம்!

சாதி பற்றி பேசினால் செருப்பால் அடிப்பேன் என வாட்டர் மிலன் ஸ்டார் திவாகரை கடுமையாக சாடியுள்ளார் நடிகர் கூல் சுரேஷ்.

Advertisement

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் திவாகர். இவர் ஒரு மருத்துவர் என்றாலும், இவருடைய உடல் மொழி காமெடியாக அமைந்ததால், இவருடைய ரீல்ஸ்களை மக்கள் அதிகம் விரும்பி பார்த்தனர். குறிப்பாக கஜினி படத்தில் சூர்யா தர்பூசணி பழத்தை சாப்பிடும் காட்சியை ரீ எடிட் செய்து இவர் பதிவிட்ட வீடியோ, அனைவரையும் கவர்ந்தது. இதனால் Watermelon Star என அழைக்கப்பட்டார்.

ஆனால் மைக் கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா என்று சொல்வது போல, இவர் சில சமயங்களில் சாதி ரீதியாக பேசுவதும் உண்டு. அதனால் அவர் மீது விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன.

Bigg

இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பும் கிடைத்தது. அதில் பங்கேற்ற அவர், அடிக்கடி கேமராவை பார்த்து ரீல்ஸ் செய்வதும், பிக் பாஸ் ஒதுக்கும் டாஸ்க்குகளை ஒழுங்காக செய்யாமல், பார்வதியுடன் சேர்ந்து இவர் அடித்த கூத்து யாராலும் மறந்திட முடியாது.

Advertisement

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசன் ஷூட்டிங் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அதனைச் சுற்றி பெரிய சர்ச்சை உருவாகியுள்ளது.

cwc

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான வாட்டர் மெலன் திவாகர், ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை மாகாபா ஆனந்த், புகழ், கானா வினோத் ஆகியோர் தாக்கியதாக குற்றம்சாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது குற்றச்சாட்டுகளை வெளியிட்டது விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியது.

Advertisement

இந்நிலையில், மாகாபா ஆனந்த், புகழ் மற்றும் கானா வினோத் உள்ளிட்டோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அவர்கள் கூறியதாவது, ஷூட்டிங் இடத்தில் இருந்த பெண் ஒருவரிடம் திவாகர் மரியாதையற்ற முறையில் பேசியதாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து நிகழ்ச்சி நிர்வாகமே அவரை நீக்கியதாகவும் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தாங்கள் தொடர்பில்லை என்றும் அவர்கள் மறுத்துள்ளனர்.

Makapa Pugazh

மேலும், திவாகர் இந்த பிரச்சினையை பெரிதாக்கி பேசுவது கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில்தான் எனவும் குற்றம்சாட்டினர்.

இதேவேளை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் திவாகர் கூறியதாக கூறப்படும் சாதி தொடர்பான கருத்துகள் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளன.

இதனை கண்டித்து நடிகர் கூல் சுரேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.தமிழ்நாட்டில் இருந்து கொண்டு சாதி பற்றி பேசுகிறாயா, உன்னை செருப்பாலேயே அடிப்பேன் என கூறியுள்ளார்.

Cool

இந்த சம்பவம் தற்போது தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Amazon Link 3
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...