டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் வானதி சீனிவாசன்!

கோவை: கோவை வடக்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் முழுமையாக குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதனிடையே அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

தொடர்ந்து சிட்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கோவை வந்த டெல்லி முதல்வர் ரேகா குப்தா அவரை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Advertisement

ஒரு சில தினங்களில் வானதி பிரச்சாரத்திற்கு வருவார் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே, வானதி சீனிவாசன் குணமடைந்துள்ளதாக மருத்துவமனைத் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வானதி சீனிவாசன் வலது காலில் ஏற்பட்ட லேசான கிருமி தொற்று காரணமாக கடந்த 10ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை மூலம் அவர் முழுமையாக குணமடைந்துள்ளார். அவர் நாளை வீடு திரும்புகிறார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஸ்டாலின் ஒரு Culprit- ஆவேசம் கொண்ட டெல்லி முதல்வர்…

கோவை: ஸ்டாலின் ஒரு Culprit என்றும் பெண்களுக்கு எதிரானவர் என்றும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆவேசமாக தெரிவித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா...

Video