கோவையில் மேதின விழா கோலாகலம்; பல்வேறு இடங்களில் கொடியேற்றம்

கோவை: கோவையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் மேதின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது

Advertisement

மேதினத்தை முன்னிட்டு உக்கடம் பகுதியில் திமுக ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் கொடியேற்றி வைத்து, பங்கேற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

வடகோவை பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனுடன், கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகத்திலும் மேதின விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பத்மநாபன் முன்னிலையில், செயலாளர் ராமசுப்பிரமணியம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், கிளை செயலாளர் ஜெயபால் மேதினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

Advertisement

இந்த நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நாளை புரட்டாசியின் அபூர்வ பவுர்ணமி… குடும்பத்தில் நிம்மதி இல்லையா? இதை செய்யத் தவறாதீர்கள்…!!

கோவை: நாளை (செப்டம்பர் 26) புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமை மிகவும் விஷேசமானது என்பதோடு, அபூர்வ பவுர்ணமியும் கூடவே வருகிறது. இந்த நன்னாளில் பெண்கள் வீடுகளில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் குறித்து...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...