கோவை: கோவை அன்னூர் அருகே குல தெய்வமான மதுர காளியம்மன் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள லக்கேபாளையம் கிராமத்தில் உள்ள மதுர காளியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நடிகர் சூர்யா அவர்களின் குல தெய்வ கோவிலான இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சூர்யாவின் தந்தை சிவக்குமார் மற்றும் கார்த்திக் பங்கேற்ற நிலையில் இன்று நடிகர் சூர்யா நேரில் வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வந்த நடிகர் சூர்யா அவர்களுக்கு கோவில் நிர்வாகம் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு சூர்யா சாமி தரிசனம் செய்தார்.


