அதிகாரிகளை வீட்டிற்கே அழைத்து ‘மீட்டிங்’ : தவெக எம்எல்ஏ கனிமொழி மீது விமர்சனம்!

கோவை: கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, அரசு அதிகாரிகளை தனது வீட்டிற்கே வரவழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்திய விவகாரம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் தவெகவைச் சேர்ந்த கனிமொழி. இவர் நேற்று அரசு அதிகாரிகளை தனது வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தியதுடன், அந்த புகைப்படங்களை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், அரசு அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தியதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதற்காக தவெகவைச் சேர்ந்தவர்களே தங்களது எம்எல்ஏவான கனிமொழியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

மக்களின் குறைகளைக் கேட்கவும், வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிடவும் களத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த வேண்டிய மக்கள் பிரதிநிதி, அவர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனை நடத்துவது முறையல்ல என்றும், தவெக கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

TVK MLA meeting

மேலும், பெரிய சோபாவில் தனியாக கனிமொழி அமர்ந்து பேசுவதையும் அக்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கணவர் மீது புகார் அளிப்பேன்- சூலூர் சிறுமியின் தாய் ஆவேசம்…

கோவை: சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தந்தை மீது புகார் அளிப்பேன் என்று தாயார் தெரிவித்துள்ளார். கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தாயார் போத்தனூர் பகுதியில்...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.