பெட்ரோல் விலை கட்டுப்பாட்டுக்கு மத்திய அரசு நடவடிக்கை- இணை அமைச்சர் சுரேஷ்கோபி கோவையில் பேட்டி…

கோவை: பெட்ரோல் விலை கட்டுப்பாட்டுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், CJP விவகாரம் தொடர்பாக அவர் கூறுகையில், வெளிநாடுகளின் சதி இருந்தால் அது முறியடிக்கப்படும் என்றும், அதற்கான அனைத்து வசதிகளும் இந்தியாவிற்கு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், CJP போன்ற விவகாரங்களை பேச நான் ஆள் இல்லை, என்னை research material ஆக்காதீர்கள். இது இங்கிருந்து செயல்படுகிறதா என ஆய்வு செய்யுங்கள், என்றார்.

பெட்ரோலியத் துறை தொடர்பாக பேசும்போது, இன்று பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கடந்த சில மாதங்களாக விலை உயர்வை compensate செய்ய முயற்சி செய்யப்பட்டதாகவும், பெரும் விலை உயர்வைத் தவிர்க்கவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விளக்கினார். விலை ஏற்றாமல் இலவசமாக வழங்கி கையிருப்பு இல்லாமல் போனால் என்ன ஆகும்? அனைத்தையும் சமநிலைப்படுத்தி தான் செயல்பட வேண்டும், என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

சர்வதேச சூழ்நிலையைப் பற்றி பேசுகையில், போர் எப்போது முடியும் என்பது தெரியாது என்றும், எல்லாரும் பிரார்த்தனை செய்வோம்… யாருக்காக இந்த போர்? எனவும் அவர் கருத்து தெரிவித்தார். ரஷ்யாவை நம்பி உள்ளோமா என்ற கேள்விக்கு, சில விஷயங்கள் தங்களுக்கே தெரியாது என்றும் பதிலளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியைப் பற்றி கூறிய அவர், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் கட்டமைப்பு பல மடங்கு மேம்பட்டுள்ளதாகவும், 1990ஆம் ஆண்டு அமெரிக்காவில் அனுபவித்த வசதிகளை தற்போது இந்தியாவில் குறைந்த செலவில் பெற முடிகிறது என்றும் தெரிவித்தார். மேலும், இந்த ஆட்சி sustainable development நோக்கில் முன்னேறி வருவதாகவும் கூறினார்.

தமிழ்நாடு அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, பாஜக தமிழ்நாட்டில் வளரவில்லை என்பது இயற்கையான நடைமுறை அது வளரட்டும், என்றார். இலவச திட்டங்கள் குறித்து, இலவசம் கொடுத்து மக்களை கெடுத்துக் கொள்ள கூடாது, என்றும் கருத்து தெரிவித்தார்.

Advertisement

நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து, விஜய் முதலில் வேலை செய்யட்டும் மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்,ந்நன்றாக செய்யட்டும். கேரளாவில் தவெக வந்தால் அங்கும் வரட்டும் பிரச்சனை இல்லை என்றார்.

அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசுகையில், ரஜினி அவரது முடிவை அவரே எடுப்பார். அவரது இதயத்தை நான் நோண்டி தொந்தரவு செய்ய முடியாது. அவர் வந்தால் வரட்டும்; தமிழ் மக்களுக்கும் உலகத்திற்கும் பயன்படட்டும். அவர் வந்தால் இவருக்கு என்ன ஆகும், அவருக்கு என்ன ஆகும் என்று பேச தேவையில்லை,என தெரிவித்தார்.

மேலும், மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், கேரளாவின் புதிய அரசு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.