ஈகை பண்பும் மனிதநேயமும் வளர வேண்டும்- கோவையில் பக்ரீத் சிறப்பு தொழுகை…

கோவை: ஈகை பண்பும் மனிதநேயமும் மென்மேலும் வளர வேண்டி கோவையில் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொள்ளப்பட்டது.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஈகை திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்கள் ஈகைத் திருநாளாக கடைபிடிக்கும் பக்ரீத் பண்டிகையானது இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நபிகளின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த பக்ரீத் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து வருகின்றனர்.

Advertisement

இந்நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி என்று அழைக்கப்படும் ஆட்டிறைச்சிகளை தானமாக வழங்குவார்கள் அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்தார் போல் ஏழை எளிய மக்களுக்கு தானங்களை வழங்குவார்கள். மேலும் சிறப்பு தொழுகையும் நடைபெறும்.

அதன்படி இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் சிறப்பு தொழுகை மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றாக சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Advertisement

இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனித்தனியாக இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தொழுகையில் கலந்து கொண்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டும் அனைவரிடமும் ஈகை பண்பும் மனிதநேயமும் மலர வேண்டும் என்று இறைவனை வேண்டி தொழுகை மேற்கொண்டனர்.

நேற்றைய தினம் ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அதிமுக அலுவலகத்திற்குள் செல்வதற்கே அருகதை இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி- அமைச்சர் நிர்மல்குமார் கடும் தாக்கு…

கோவை: எம்.ஜி.ஆர். உருவாக்கிய தலைமை அலுவலகத்திற்குள் செல்வதற்கோ, அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்கோ எந்தத் தார்மீக அருகதையும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். கோவையில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...