கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி- சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழ்நாடு அணி…

கோவை: கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கோவாவை வீழ்த்தியது தமிழ்நாடு அணி.

Advertisement

மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம் மற்றும் கலைமகள் கல்லூரி இணைந்து வீல்சேர் டி20 கிரிக்கெட் லீக் போட்டி,நரசீபுரம் பகுதியில் உள்ள கலை மகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற்ற இதில், மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக போட்டிகள் நடைபெற்றன.

முன்னதாக போட்டிகளை கல்லூரியின் அறங்காவலர் தங்கவேலு தொடங்கி வைக்க, முதல்வர் முனைவர் மாலா வீரர்களை வாழ்த்தி வரவேற்றார்.போட்டியில் வீல் சேரில் அமர்ந்தபடி பவுலிங்,பேட்டிங் என கிரிக்கெட் போட்டியை மாற்றுத்திறனாளிகள் அசத்தலாக விளையாடினர்.

இத்தொடரின் முதல் போட்டியில் கோவா அணி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடிய தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

Advertisement

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், லட்சுமி அத்வைத் நிறுவனத்தின் மனிதவளத் தலைவர் கிருஷ்ணகுமார், சி.எஸ்.ஆர்.தலைவர் அனு கிருத்திகா, ஐ எக்ஸ்ப்ளோர் பவுண்டேஷன் நவநீத கிருஷ்ணன், ஜோதுன்ஹெய்ம் அறக்கட்டளை எபினேசர், ராக் அமைப்பு ராம்மோகன், ரோட்டரி மித்ருத்வா பத்மநாபன் மற்றும் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கத் தலைவர் துரைபாண்டியன், பயிற்சியாளர் அனீஷ் ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி வீரர்களின் அசாத்திய திறமையையும், விடாமுயற்சியையும் பாராட்டி கௌரவித்தனர்.

அதே போல,போட்டி வெற்றிகரமாக நடைபெற ஆதரவு வழங்கிய அனைத்து நன்கொடையாளர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது..

Advertisement

போட்டியில் முதல் இடம் பிடித்த தமிழ்நாடு அணிக்கு வெற்றிக்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கோவாவின் நாகேஷ் ரெட்கரும், சிறந்த பந்துவீச்சாளர் விருதை தமிழ்நாட்டின் அசோக் குமாரும் வென்றனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ துவக்கிய ஜனநாயகன் பாஸ்போர்ட்…

ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, "ஜனநாயகன் பாஸ்போர்ட்" என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. டாக்டர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார். பொறுப்புள்ள குடிமகனாக செயல்பட உறுதிமொழி எடுக்க ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...