கோவையில் அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம்…

கோவை: கோவையில் மதுவிலக்கு மற்றம் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை
சார்ந்த பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்ந்த பணி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார், மாநகர காவல் ஆணையர் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக துறைசார்ந்த ஆய்வுக்கூட்டங்கள் ஒவ்வொரு வாரமும் நடத்தப்பட்டு வருவதாகவும், பள்ளி கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்ட விவரங்கள். சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொண்டு வரும் ஆய்வு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரால் எடுத்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்ததாவது

Advertisement

கோயம்புத்தூர் மாநகர தமிழ்நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற மைங்களில் ஒன்றாகும். இது தென்னிந்தியாவின் ஒரு முக்கிய தொழில்முறை கல்வி மற்றும் வணிக மையமாகத் திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மக்கள் தொகை ஆகியவை போதைப்பொருட்கள் விநியோகத்திற்கு சாதகமான சூழல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப்பொருட்கள் நிச்சயமாக தமிழ்நாட்டில் இருக்ககூடாது என்பது தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவாகும் முழுமையான நடவடிக்கைகள் போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கும்வகையில் பல்வேறு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக அடுத்த தலைமுறையினரை காப்பாற்ற வேண்டும். ஆரோக்கியமான அடுத்த தலைமுறையினரை உருவாக்கவேண்டும் என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் லட்சியமாகும் என்றார்.

அதனடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் எந்தவிதமான போதைப் பொருட்கள் கிடைக்ககூடாது என்றவகையில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. போதை மருந்துகள் மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகள் கல்லூரிகள். விடுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பெட்டிகடைகள், சில மருந்துகடைகள், உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் தொடர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். சரவணம்பட்டி ஐடி, விமானநிலையம் வழித்தடம். ஈச்சனாரி வளர்ச்சி வழித்தடம், ஆகிய ஐடி மற்றும் கார்ப்பரேட் வழித்தடங்கள் மற்றும் ரத்தினபுரி, கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, புள்ளுகாடு, வெள்ளலூர், சௌரிபாளையம், காமராஜபுரம், சித்தாபுதூர், செல்வபுரம், புலியகுளம் உள்ளிட்ட தொழிலாளர்கள் கூடும் பகுதிகளில் கண்காணிப்புகளை காவல்துறையினர் அதிகப்படுத்த வேண்டும்.

மேலும், பள்ளி கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் ஐடி பணியாளர்கள் மற்றும் விடுதிகளில் தங்கும் இளைஞர்களுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். போதைப்பொருட்களினால் உடல் / மனநல பாதிப்புகள் மற்றும் சட்டரீதியான விளைவுகள் குறித்து இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மூலம் விவரிக்கப்படவேண்டும் என்றார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவைக்கு பெருமை சேர்த்த ஐஐடி மாணவர்; Google AI போட்டியில் உலகளவில் வெற்றி

கூகுள் டீப்மைண்ட் உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி போட்டியில் கோவையைச் சேர்ந்த ஐஐடி சென்னை மாணவர் அர்ஜுன் திலக் ரூ.24 லட்சம் பரிசை வென்று சாதனை படைத்தார். அவரது வெற்றியை அமைச்சர் சம்பத் குமார் நேரில் பாராட்டினார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...