Rasipalan today: 2 ராசிகளுக்கான இன்றைய (02.06.2026) ராசிபலனை இந்த தொகுப்பில் காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு இன்று தொட்ட காரியங்கள் துலங்கும் நன்னாளாக அமைகிறது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் செய்யும் இடத்தில் புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தைக் காண முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. வீண் விவாதங்களில் ஈடுபடாமல் அமைதி காப்பதன் மூலம் மன அமைதியையும் நாள் முழுவதும் நன்மைகளையும் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு இன்று வரவுகளும் செலவுகளும் சமமாக இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பாராட்டு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறு அக்கறை காட்டுவது நல்லது.
கடகம்
கடக ராசிக்கு இன்று சவாலான காரியங்களையும் எளிதாக முடிக்கும் ஆற்றல் பிறக்கும். உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்கு இன்று திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். பிள்ளைகளின் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கு இன்று புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மைகள் உண்டாகும். வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சில செலவுகள் செய்ய நேரிடலாம். தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும்.
துலாம்
துலாம் ராசிக்கு இன்று சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதாகக் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறைந்து நிம்மதி கூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். பணப்புழக்கம் அதிகரித்து சேமிப்பு உயரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். கொடுத்த கடன்கள் திரும்ப வரலாம்.
தனுசு
தனுசு ராசிக்கு இன்று மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். தொழிலில் புதிய உத்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்கு இன்று அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கேற்ற பலன்கள் நிச்சயம் கிடைக்கும். வீண் செலவுகளைக் குறைத்து சுபச் செலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணங்களின் போது உடைமைகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசிக்கு இன்று தொட்டதெல்லாம் பொன்னாகும் இனிய நாளாக அமைகிறது. மூத்த சகோதரர்களின் ஆதரவு மனதிற்கு தைரியத்தைத் தரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த நல்ல உதவிகள் வந்து சேரும்.
மீனம்
மீன ராசிக்கு இன்று நினைத்த காரியங்கள் கைக்கூடும் நாளாக அமைகிறது. உத்தியோகத்தில் உங்களின் திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.


