Rasipalan Today: 12 ராசிகளுக்கான இன்றைய (ஜூன் 4ம் தேதி) ராசிபலனை இந்தத் தொகுப்பில் காணலாம்.
மேஷம்
செவ்வாயின் சாதகமான சஞ்சாரத்தால் இன்று உங்களுக்கு நற்பலன்கள் தேடி வரும். ஆன்மீக நாட்டம் மற்றும் தெய்வ பக்தி அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் மகிழ்ச்சியைத் தரும். மனதில் புதிய சுயநம்பிக்கையும், தைரியமும் பிறக்கும்.
ரிஷபம்
ராசிநாதனின் பார்வையால் தன வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபாடு காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக அமையக்கூடும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டம தினம் என்பதால் செயல்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. வீண் விவாதங்களையும், புதிய முதலீடுகளையும் தவிர்க்கவும். மன அமைதிக்காக இறை வழிபாட்டில் கவனம் செலுத்துவது நல்லது. யாருக்கும் வாக்குறுதிகள் தர வேண்டாம்.

கடகம்
சின்னச் சின்ன விஷயங்களுக்கு கவலைப்படுவதை தவிர்க்கவும். மற்றவர்களை நம்பி முதலீடு செய்தால் இன்று நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களை மகிழ்விக்கும் செயல்களில் ஈடுபடவும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும்.
சிம்மம்
உங்களுக்கு ராஜயோக பலன்கள் கிடைக்கக்கூடிய மகா நாளாகும். உங்கள் கம்பீரம் மீண்டும் அரியணை ஏறும். தடைப்பட்ட காரியங்கள் யாவும் நல்லபடியாக முடியும். எதிர்பாராத நற்செய்திகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
நீண்ட நாட்களாக இருந்த நெருக்கடிகள் அனைத்தும் இன்று நீங்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியாக மாறும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலை கணிசமாக உயரும்.
துலாம்
குடும்பத்தில் சிறு குழப்பங்கள் உண்டாக வாய்ப்புள்ளதால் பொறுமையைக் கையாள்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். சுப காரிய முயற்சிகளில் சற்று தாமதம் ஏற்படலாம். நிதானமாக செயல்பட்டால் நன்மைகள் உண்டாகும்.
விருச்சிகம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வந்து சேரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.
தனுசு
பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். தடைப்பட்ட சுப காரியங்கள் மீண்டும் சுமுகமாகத் தொடங்கும்.
மகரம்
இன்று வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பண விஷயத்தில் கவனம் தேவை. முக்கிய காரியங்களில் சிறு தாமதம் உண்டாகலாம். உடலிலும் மனதிலும் சோர்வு வந்து நீங்கும். யோசித்துச் செயல்படுவது வெற்றியைத் தரும்.
கும்பம்
கண்மூடித்தனமாக எந்தவொரு முடிவையும் எடுக்காமல் நிதானமாகச் செயல்பட வேண்டும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உங்களுக்கு மிகவும் வேண்டியவரை விட்டு பிரிய நேரிடலாம் என்பதால் கவனம் தேவை.
விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகும் இனிய நாளாக இருக்கும். பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் ஏற்படுவதற்கான சூழல் கூடிவரும்.


