கோவை மாநகராட்சி பூங்காக்களில் சிறப்பு தூய்மை…

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்கள் சிறப்பு தூய்மை செய்யப்பட்டன.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அறிவுறுத்தலின் படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தலின் படி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களான கிழக்கு மண்டலத்தில் 87 எண்ணிக்கையிலும், மேற்கு மண்டலத்தில் 92 எண்ணிக்கையிலும், வடக்கு மண்டலத்தில் 84 எண்ணிக்கையிலும், தெற்கு மண்டலத்தில் 70 எண்ணிக்கையிலும், மத்திய மண்டலத்தில் 65 எண்ணிக்கையிலும் என ஐந்து மண்டலங்களிலும் பூங்காக்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணியில், மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் தேவையற்ற செடி, கொடிகளை அகற்றப்பட்டன. மேலும். பூங்காக்களில், பொதுமக்கள் மற்றும் முதியோர்களுக்கான நடைபயிற்சிக்கான நடைபாதை வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள், மின்விளக்குகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் நிலை குறித்தும் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வந்த இந்திய தேர்தல் ஆணையர்- தமிழ்நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பு…

கோவை: தமிழ்நாட்டில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு நடந்ததற்கு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...