விவசாயக் கடன் தள்ளுபடி- பாதி அந்தரத்தில் தொங்கவிட்டது- கோவை விவசாயிகள் ஆதங்கம்

கோவை: விவசாய கடன் தள்ளுபடி விவசாயிகளை பாதி அந்தரத்தில் தொங்கு விடுவது போன்று உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை சூலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிசாமி செய்தியளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் விவசாய கடன் தள்ளுபடி அறிவித்திருப்பது விவசாயிகளை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது என்றார்.

Advertisement

ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகள் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தார். ஆனால் தற்போது 50,000 ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாய் என வரம்பை உயர்த்தி அறிவித்துள்ளது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கிறது என்றார்.

இது பாதி கிணறு தாண்டிய நிலையில் விவசாயிகளை அந்தரத்தில் உங்க விடுவது போல் உள்ளது என்றும் கூறினார். மகாராஷ்டிரா அரசு 35 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளது ஆனால் தமிழகத்தில் விவசாயிகள் வாங்கியுள்ள 15,000 கோடி ரூபாயை கூட தள்ளுபடி செய்ய இந்த அரசு யோசிக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விரைவில் முழு கடன் தள்ளுபடியையும் அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கொண்டையை மறைக்காத அண்ணாமலை- கோவையில் மாணிக்கம் தாகூர் தாக்கு!

கோவை: கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து ஒருவர் வருகிறார் என அண்ணாமலையை மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். கோவை, சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும்...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...