மானியத்தில் மின் மோட்டார், பம்பு செட்- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை…

கோவை: மானியத்தில் மின் மோட்டார் பம்பு செட்கள் வழங்கும் திட்டத்தில் பயனடைய மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வேளாண்மைப் பொறியியல்துறையின் மூலம் அரசு மானியத்துடன் மின் மோட்டார் பம்பு செட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், பயிர் உற்பத்தியினை அதிகரிக்கவும் நிலத்தடி நீர்பாசனத்தில் மின் மோட்டார் பம்பு செட்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பழைய திறன் குறைந்த மின் மோட்டார் பம்பு செட்களைத்தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகிறது.

எனவே, தமிழக அரசு, விவசாயிகளுக்கு பழையதிறன் குறைந்தமின் மோட்டார் பம்பு செட்களை மாற்றுவதற்கு அல்லது புதிய கிணறு / ஆழ்துளை கிணறுகளுக்கான மின்மோட்டார் பம்ப் செட்களை வாங்குவதற்கு, மானியமாக ரூ.15,000/- அல்லது மொத்த விலையில் 50% இவற்றில் எதுகுறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

Advertisement

மேலும், இத்திட்டம் தொடர்பாக முழு விபரங்களை பெற்று பயன்அடைய செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், தடாகம் ரோடு, ஜி.சி.டி, அஞ்சல், கோயம்புத்தூர் 13 (0422-2964838)உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம் தடாகம் ரோடு, ஜி.சி.டி, அஞ்சல், கோயம்புத்தூர்-13 (0422 2966500 / 8778370929)

உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், ஒழுங்கு முறை விற்பனை பொள்ளாச்சி-01 கூட வளாகம், மீன்கரை ரோடு, (04259 292271/ 9443566451) ஆகிய அலுவலகங்களை அணுகுமாறு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

அன்னூர் பகுதியில் பிக்கப் வாகனம் மீது மோதிய பொலிரோ- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் டாஸ்மாக் அருகே நின்று இருந்த பிக்கப் வேன் மீது அதிவேகமாக மோதிய பொலிரோ காரின் பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை, அன்னூரில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில்...

Latest News Coimbatore

Video

அன்னூர் பகுதியில் பிக்கப் வாகனம் மீது மோதிய பொலிரோ- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் டாஸ்மாக் அருகே நின்று இருந்த பிக்கப் வேன் மீது அதிவேகமாக மோதிய பொலிரோ காரின் பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை, அன்னூரில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில்...