கோவையில் மகளிர் வேலைவாய்ப்பு நேரடி சேர்க்கை முகாம்…

கோவை: வேலைவாய்ப்பு, பயிற்சித்துறையில் மகளிருக்கு நேரடி சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்)
நேரடி சேர்க்கை 15.06.2026 முதல் 30.062026 வரை நடைபெறுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோடு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கி வரும் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவியர்கள் சேரநேரடி சேர்க்கை 15.06.2026 முதல் 30.06.2026 வரை சேர்க்கை நடைபெறுகிறது. இதில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு பயிற்சியில் Computer Operator & Programming Assistant (COPA)Desktop Publishing Operator (DTPO)IoT Technician (Smart Health Care தொழிற்பிரிவுகளும், ஈராண்டு பயிற்சியில் Instrument Mechanic (1M) Electronics Mechanic (EM) Information Technology (IT)Technician Medical Electronics (TME) தொழிற்பிரிவுகளும், ஆறு மாத பயிற்சியில் Smart Phone Technician cum App Tester தொழிற்பிரிவும் பயிற்றுவிக்கப்படுகிறது.

Advertisement

இந்த தொழிற்பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் Sewing Technology பிரிவில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றால் மத்திய அரசின் தேசிய தொழிற்சான்றிதழ் (NCVT) வழங்கப்படும்.

மாணவியர்கள் தங்களின் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், செல்போன் எண், இமெயில் ஐடி, ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமை கோரினால் அதற்கான முன்னுரிமைச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் அரசு தொழிற்பயிற்சி தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கோவையில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.50-ஐ G Pay அல்லது நெட் பேங்கிங் வாயிலாக செலுத்தலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- மற்றும் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்படும்.

மேலும் பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகம், சீருடை 2sets சீருடைக்கான தையல் கூலி, காலணி மற்றும் வரைபடக் கருவிகள் விலையில்லாமல் வழங்கப்படும். பயிற்சி முடித்த பின் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, அப்பரண்டிஷிப் பெற்றுத்தரப்படும் பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு குறைந்தபட்ச வயது 14 மற்றும் உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை மற்றும் சிறப்பு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.

விண்ணபிக்க கடைசி நாள் 30.06.2026 ஆகும்.கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்.
9865128182,94990 55692, 88381 58132, 94422 39112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

மானியத்தில் மின் மோட்டார், பம்பு செட்- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை…

கோவை: மானியத்தில் மின் மோட்டார் பம்பு செட்கள் வழங்கும் திட்டத்தில் பயனடைய மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேளாண்மைப் பொறியியல்துறையின் மூலம் அரசு மானியத்துடன் மின் மோட்டார் பம்பு செட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர்...

Latest News Coimbatore

Video

கோவையில் முதல்வருக்கு செவித்திறன் கருவி அனுப்பி சமூக ஆர்வலர் நூதன போராட்டம்…

கோவை: கோவையில் சமூக ஆர்வலர் ஒருவர் முதல்வருக்கு செவிதிறன் கருவியை அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். கோவையில் சமூக ஆர்வலர் ஒருவர், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக...